சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ம்மா.. உங்க மகனை மசோதாவை திரும்ப பெற சொல்லுங்க".. மோடியின் அம்மாவுக்கே லெட்டர் போட்ட விவசாயி!

பிரதமர் மோடியின் அம்மாவுக்கு பஞ்சாப் விவசாயி கடிதம் எழுதி உள்ளார்

Google Oneindia Tamil News

சண்டிகர்: என்னதான் செய்வதென்று தெரியாமல், கடைசியில் மோடியின் அம்மாவுக்கே ஒரு விவசாயி லெட்டர் எழுதிவிட்டார்.. "அம்மா.. எங்களுக்கு எப்படியாவது உதவி செய்யுங்க..ம்மா" என்று டெல்லி போராட்டத்திற்கு விடிவு கேட்டு அந்த லெட்டரை எழுதி உள்ளார்.

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி, கடந்த 2 மாதமாகவே விவசாயிகள் நடத்தி வரும் பிரச்சனை நாட்டையே உலுக்கி எடுத்து வருகிறது.. டெல்லியில் இப்போது மோசமான வானிலை நிலவுகிறது.. உடம்பையே குத்தி எடுக்கும் குளிர் வாட்டி எடுக்கிறது..

 Punjab farmer writes letter to PM Modis Mother Hiraben for farmers protest

அந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் பெரும்பாலும் வயசானவர்கள்தான்.. இந்த முறை 15 வருஷங்களில் இல்லாத அளவுக்கு குளிர் டெல்லியை வாட்டுகிறதாம்.. இதில் மழையும் சேர்ந்து பொழிகிறது.. அதனால் அங்கு குளிர் இன்னும் மோசமாக இருக்கிறது..

இருந்தாலும் தங்கள் உடல்நிலையை பற்றி கவலையே கொள்ளாமல் மனஉறுதியோடு வயதான விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.. இது தொடர்பாக, கடந்த மாதம் சில விவசாயிகள் தங்கள் ரத்தத்தினாலேயே பிரதமருக்கு லெட்டர் ஒன்றையும் எழுதியிருந்தனர். அதில் ஒன்றும் பலன் கிடைக்கவில்லை. இப்போது, ஒருபடி மேலேபோய் பிரதமரின் அம்மாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் பெரோஸிபூரை சேர்ந்த விவசாயி ஹர்ப்ரீத் சிங் என்பவர்தான் மோடியின் அம்மா ஹிராபென்-க்கு ஒரு லட்டர் எழுதியிருக்கிறார்.. அதில், "அம்மா... இந்த லெட்டரை நான் எழுதுவதற்கு காரணம், 3 வேளாண் சட்டங்களையும் உங்களின் மகனும், நாட்டின் பிரதமருமான மோடி திரும்பப் பெறுவார் என்ற நம்பிக்கையில் தான்.

ஏனென்றால், அம்மாவின் வேண்டுகோளை எந்தவொரு மகனும் மறுக்க மாட்டார்கள்... இந்தியாவைப் பொறுத்தவரை நாம் தாயை தான், தெய்வாக பார்த்து கொண்டிருக்கிறோம். இப்படி கடுங்குளிரில் உட்கார்ந்து போராடி கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு உதவி செய்யுங்கள் தாயே" என்று எழுதி உள்ளார். இந்த கடிதத்தை ஹிந்தியில் எழுதியிருக்கிறார்.. சோஷியல் மீடியா முழுக்க இந்த லெட்டர்தான் வைரலாகி கொண்டிருக்கிறது. என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலில், இந்த கடிதத்தை, ஹர்ப்ரீத் சிங்தான் எழுதினார் என்று யாருக்குமே தெரியாதாம்.. சிம்லாவில் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தை நடத்தும்போது, இவருடன் சேர்த்து 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. ஜெயிலில் அடைத்துள்ளனர்.. ஒருநாள் ஜெயிலில் இருக்கும்போது, இந்த லெட்டர் எழுதியதை பற்றி நண்பர்களிடம் சொன்னாராம்.. அப்போதுதான் விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.

இன்னும் இந்த லெட்டரை மோடி அம்மாவுக்கு அனுப்பவில்லையாம்.. மீடியாக்களிடம்தான் காட்டி உள்ளார்.. இனிமேல்தான் அவருக்கு அனுப்பி வைக்க போகிறாராம்.. ஏற்கனவே ரத்தத்தினால் லெட்டர் எழுதி கோரிக்கை வைத்து தோல்வியடைந்த நிலையில், இந்த அம்மா "சென்ட்டிமென்ட்" ஒர்க்அவுட் ஆகிறதா என்று பார்ப்போம்..!

English summary
Punjab farmer writes letter to PM Modis Mother Hiraben for farmers protest
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X