சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரயில் விபத்து.. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம்.. பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப்பின் அமித்ரசரஸ் நகரில் ரயில் விபத்து நடந்த இடத்திற்கு பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் நாளை காலை செல்ல உள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள செளரா பஜார் பகுதியில் தசரா விழாவையொட்டி ராவண வதம் நடைபெற்றது. அப்போது ராவணன் உருவபொம்மையை எரித்துக் கொண்டிருந்தனர். மறுபக்கம் பட்டாசுகளும் வெடித்துள்ளனர். அப்போது அங்கு தீ வந்து விழுந்ததைப் பார்த்த மக்கள் பயந்து ஓடியுள்ளனர்.

Punjab government will give Rs 5 lakh to kin of Train accident victims kin

ஆனால் அதே நேரம் அவ்வழியாக சென்ற ரயில் ஒன்று மோதியதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதாக முதல்வர் அம்ரிந்தர் சிங் ட்வீட் செய்துள்ளார். அதில் மேலும் அவர் கூறுகையில், சம்பவ இத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கைகளை, மேற்பாரவையிட உள்ளேன். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தோருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், இலவச சிகிச்சை வழங்கப்படும். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அம்மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
Punjab government will give Rs 5 lakh to kin of Train accident victims kin. And the cm has visited the spot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X