சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல்: பிரதான கட்சிகளுக்கு டஃப் கொடுக்கும் சுயேச்சை வேட்பாளர்கள்!

Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களும் பல இடங்களில் மொத்தமாக வெற்றி பெற்று அசத்தி வருகின்றனர்.

ஜோகா மாவட்டம் மான்சா பகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் 13 வார்டுகளில் 12 இடங்களை கைப்பற்றினார்கள்.இதே போல் பல இடங்களில் பிரதான கட்சிகளுக்கு கடும் போட்டி அளித்து வருகின்றனர் சுயேச்சைகள்.

Punjab local body elections: Independent candidates to face stiff competition to major parties!

பஞ்சாபில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் இந்த தேர்தலில் நன்கு எதிரொலித்துள்ளது.நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. அங்குள்ள 7 மாநகராட்சிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களும் பல இடங்களில் மொத்தமாக வெற்றி பெற்று அசத்தி வருகின்றனர். இந்த தேர்தலில் களம் கண்ட 9,222 வேட்பாளர்களில் 2,832 சுயேச்சைகள் காங்கிரஸ், பாஜக கட்சிகளை விட அதிககளவில் போட்டியிட்டனர். இதேபோல் பல இடங்களில் பிரதான கட்சி வேட்பாளர்களுக்கு போட்டியாக சுயேச்சைகள் வெற்றி வாகை சூடி வருகின்றனர்.

பஞ்சாப்பில் பாஜக படுதோல்வி.. 53 வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் பெற்ற இமாலய வெற்றி.. காரணம் இதுதான்! பஞ்சாப்பில் பாஜக படுதோல்வி.. 53 வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் பெற்ற இமாலய வெற்றி.. காரணம் இதுதான்!

ஜோகா மாவட்டம் மான்சா பகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் 13 வார்டுகளில் 12 இடங்களை கைப்பற்றினார்கள். ஜலந்தர் பகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் சுமார் 54% இடங்களில் வெற்றியைப் பதிவு செய்தனர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் 43% இடங்களில் வெற்றி பெற்றனர். இதே போல் பல இடங்களில் பிரதான கட்சிகளுக்கு கடும் போட்டி அளித்து வருகின்றனர் சுயேச்சைகள்.

English summary
Independent candidates in the Punjab local body elections have also won a number of seats
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X