சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாடு திரும்பிய 91,000 என்.ஆர்.ஐகள்- மத்திய அரசிடம் ரூ150 கோடி நிதி உதவி கோரும் பஞ்சாப்

Google Oneindia Tamil News

சண்டிகர்: வெளிநாடுகளில் இருந்து 91,000 பேர் பஞ்சாப் திரும்பியுள்ள நிலையில் கொரோனா தனிமைப்படுத்துதல் வார்டுகளை அமைக்க மத்திய அரசிடம் நிதி உதவி கோரியுள்ளது பஞ்சாப் மாநில அரசு.

Recommended Video

    கொரோனாவை கட்டுபடுத்த இந்தியாவுக்கு உதவ தயார் - சீனா அறிவிப்பு

    கொரோனா தாக்கம் பரவ தொடங்கியதில் இருந்து உலகின் பல பகுதிகளில் இருந்தும் பஞ்சாபியர்கள் இந்தியா திரும்ப தொடங்கினர். கடந்த சில மாதங்களில் மட்டும் 91,000 பேர் பஞ்சாப் திரும்பியுள்ளனர்.

    Punjab seeks funds to build Coronavirus isolation wards

    தற்போது இவர்கள் அனைவரையும் கொரோனா மையத்தில் வைத்து கண்காணிக்க வேண்டிய நெருக்கடியை பஞ்சாப் அரசு எதிர்கொண்டிருக்கிறது. இதனால் இத்தகைய கொரோனா தனிமைப்படுத்துதல் வார்டுகள் அமைக்க ரூ150 கோடி நிதி உதவி செய்ய மத்திய அரசிடம் பஞ்சாப் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக பஞ்சாப் மாநில அமைச்சர் பி.எஸ். சித்து கூறுகையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏராளமான பேருக்கு பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கிறது. ஆகையால் மத்திய அரசிடம் நிதி உதவி கோரியுள்ளோம். இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனை 5 எம்.பி.க்கள் சந்தித்து வலியுறுத்த உள்ளனர் என்றார்.

    திமுகவுக்குள் திமுகவுக்குள் "டெக்னிக்கல்" சண்டையா.. ஐடி விங்குக்கும் "அவருக்கும்" பூசலாமே.. குழப்பத்தில் தலைமை!

    பஞ்சாப் மாநிலத்தில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ3,000 நிதி உதவி வழங்கப்படும் என்றும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

    English summary
    Punjab Govt is seeking Rs150 crore fund to build Coronavirus isolation wards.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X