சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பஞ்சாப் தசராவில் சோகம்.. பட்டாசுக்கு பயந்து ஓடிய மக்கள் மீது ரயில் மோதி 50க்கு மேற்பட்டோர் பலி

பஞ்சாப் அமிர்தசரஸில் ரயில் மோதி விபத்து ஏற்பட்டதில் 30 பேர் பலியாகி உள்ளனர்.

Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ரயில் மோதி விபத்து ஏற்பட்டதில் 50க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் அருகே உள்ள செளரா பஸார் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பதான்கோட்டில் இருந்து அமிர்தசரஸ் வந்த ரயில் தண்டவாளத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

 Punjab: Several feared dead as a train runs into a burning Ravan effigy in Amritsar

பஞ்சாப் மாநிலம் அருகே உள்ள ஜோரா பதாக் பகுதியில் தசரா விழாவையொட்டி ராவண வதம் நடைபெற்றது. அப்போது ராவணன் உருவபொம்மையை எரித்துக் கொண்டிருந்தனர். மறுபக்கம் பட்டாசுகளும் வெடித்தன. அப்போது தீ வந்து விழுந்ததைப் பார்த்த மக்கள் பயந்து ஓடியுள்ளனர்.

அருகே இருந்த ரயில்வே தண்டவாளத்தின் மீது மக்கள் ஏறிய ஓடியபோது, பதான்கோட்டில் இருந்து அமிர்தசரஸ் வந்த ரயில் அவர்கள் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பலி எண்ணிக்கை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் ஏற்பாடு செய்த விழா

இந்த தசரா விழாவை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரரும், அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவிதான் இதன் சிறப்பு விருந்தினர் ஆவார். பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு உரிய அனுமதியும் பெறப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மக்கள் மீது ரயில் மோதி விபத்து நேர்ந்தபோது சித்துவின் மனைவி நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தாராம். விபத்தைப் பொருட்படுத்தாமல் அவர் பேசிக் கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

மோடி இரங்கல்

ரயில் விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி அதிர்ச்சியும், வருத்தமும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், விபத்து குறித்து அறிந்து இதயம் வேதனையுற்றது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். சம்பவ இடத்தில் யாருக்கு என்ன உதவி தேவை என்பதைப் பார்த்து செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மீட்பு

அங்கு தற்போது மீட்பு படையினர் விரைந்து இருக்கிறார்கள். பலி எண்ணிக்கை 50ஐ தாண்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 30க்கும் மேற்பட்டோர் இதில் படுகாயமம் அடைந்துள்ளனர்.இதில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்து இருக்கிறது.

English summary
Punjab: Several feared dead as a train runs into a burning Ravan effigy in Choura Bazar near Amritsar: More details awaited
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X