சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளை முதல் பஞ்சாப்பில் ஊரடங்கு உத்தரவு தளர்வு.. மே 31 வரை லாக்டவுன் நீட்டிப்பு

Google Oneindia Tamil News

சண்டிகர்: நாளை, மே 19ம் தேதி, திங்கள்கிழமை முதல் பஞ்சாப் மாநிலம் ஊரடங்கு உத்தரவை தளர்த்த உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்த லாக்டவுன் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Lockdown 4.0| நாடு முழுவதும் மே 31 வரை தொடரும் ஊரடங்கு... மத்திய அரசு அறிவிப்பு

    குறைந்த அளவிலான பொதுப் போக்குவரத்துடன் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகளை எளிதாக்குவதுதான் 19ம் தேதிக்கு பிந்தைய பிளான். ஆனால் பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்று முதல்வர் கூறினார்.

    Punjab will remove curfew on Monday but lockdown will be tll May 31

    மே 18 முதல் அதிகபட்ச கடைகள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களை திறக்க அனுமதிப்போம். என்ன சேவைகள் அல்லது வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்படும் என்பது குறித்த முழு விவரங்களும் திங்கள்கிழமை வெளியிடப்படும். கட்டுப்பாடுகளை தளர்த்த அனுமதிக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளோம். இவ்வாறு அமரிந்தர் சிங் தெரிவித்தார்.

    சுகாதார பணியாளர்களுக்கு சல்யூட்.. கலக்கலாக ஒளிரும் கொல்கத்தா ஹவுரா பாலம்சுகாதார பணியாளர்களுக்கு சல்யூட்.. கலக்கலாக ஒளிரும் கொல்கத்தா ஹவுரா பாலம்

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ம் தேதி முதல் மே 17 வரை மூன்றாம் கட்ட லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 17ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையுடன், 3வது கட்ட ஊரடங்கு நிறைவடைகிறது என்றபோதிலும், மீண்டும் அது நீட்டிக்கப்பட உள்ளது. சமீபத்தில் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடியும் இதை உறுதி செய்தார். இந்த நிலையில்தான், ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு 4.0 குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது. நேற்று இரவுக்குள், இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்து.

    English summary
    Punjab will remove curfew on Monday, but the lockdown necessitated by the coronavirus pandemic will remain till May 31, Chief Minister Captain Amarinder Singh said in a statement today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X