சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹரியானாவில் செம கலாட்டா- ராஜஸ்தான் போலீஸ் பிடியில் இருந்து பைலட் ஆதரவு எம்.எல்.ஏ. கிரேட் எஸ்கேப்

Google Oneindia Tamil News

சண்டிகர்: ஹரியானா ரிசார்ட்டில் தங்கி இருந்த சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ. பன்வார் லால் சர்மா தம்மிடம் விசாரணை நடத்த வந்த ராஜஸ்தான் போலீசிடம் இருந்து தப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் அரசியலில் நாள்தோறும் புதிய திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அத்துடன் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பேரம்...சிக்கியது ஆடியோ...மறுக்கிறார் அமைச்சர்!!ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பேரம்...சிக்கியது ஆடியோ...மறுக்கிறார் அமைச்சர்!!

சர்ச்சை ஆடியோக்கள்

சர்ச்சை ஆடியோக்கள்

இதன் உச்சகட்டமாக மத்திய அமைச்சர் கஜேந்திர செகாவத், சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பன்வார் லால் சர்மா, விஸ்வேந்திர சிங் உள்ளிட்டோரின் ஆடியோ ஒன்றி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதனடிப்படையில் பாஜகவை சேர்ந்த சஞ்சய் ஜெயின் என்பவர் கைது செய்யப்பட்டார்.

மத்திய அமைச்சரை கைது செய்ய வலியுறுத்தல்

மத்திய அமைச்சரை கைது செய்ய வலியுறுத்தல்

ராஜஸ்தானில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக 2 ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. இதனை வைத்து மத்திய அமைச்சர் கஜேந்திர செகாவத்தை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா வலியுறுத்தி இருந்தார்.

ஹரியானா கூவத்தூர்

ஹரியானா கூவத்தூர்

இந்த நிலையில் ஹரியானாவின் மானேசரில் ஐடிசி கிராண்ட் பாரத் ரிசார்ட்டில் சச்சின் பைலட் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தங்கி உள்ளனர். இங்குதான் ஆடியோ டேப்பில் சிக்கிய பன்வார் லால் சர்மா, விஸ்வேந்திர சிங் ஆகியோரும் உள்ளனர். இவர்களிடம் விசாரணை நடதுவதற்காக ராஜஸ்தான் சிறப்பு போலீசார் ஹரியானாவின் மானேசர் சென்றனர்.

ராஜஸ்தான் போலீஸுக்கு செக்

ராஜஸ்தான் போலீஸுக்கு செக்

ஆனால் ராஜஸ்தான் சிறப்பு போலீசாரை ஹோட்டலுக்கு செல்லவிடாமல் ஹரியானா போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவழியாக ஹரியானா போலீஸ் அனுமதியுடன் ஐடிசி கிராண்ட் ஹோட்டலுக்குள் சென்றது ராஜஸ்தான் போலீஸ் டீம். இருப்பினும் சர்ச்சைக்குரிய எம்.எல்.ஏ. பன்வார் லால் சர்மா அங்கிருந்து தப்பிவிட்டார். இதனால் ராஜஸ்தான் போலீசா பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

English summary
A team of Rajasthan Police's Special Operations Group that had visited the ITC Grand Bharat Hotel in Manesar on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X