சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக ராகுல் டிராக்டர் பேரணி- ஹரியானாவில் தடுக்கப்பட்டு பின் அனுமதி

Google Oneindia Tamil News

சண்டிகர்: மத்திய பாரதிய ஜனதா அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டிராக்டர் பேரணி நடத்திய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நிபந்தனைகளை விதித்து ராகுலின் பேரணிக்கு ஹரியானா அரசு அனுமதி அளித்தது.

புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநில விவசாயிகள் போர்க்கோலம் பூண்டுள்ளனர். இந்த விவசாயிகளுடன் ராகுல் காந்தியும் களம் இறங்கி உள்ளார்.

ஹத்ராஸ்.. பெண் உடலை இரவோடு எரித்தது ஏன்? உச்சநீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு கூறிய காரணத்தை பாருங்கஹத்ராஸ்.. பெண் உடலை இரவோடு எரித்தது ஏன்? உச்சநீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு கூறிய காரணத்தை பாருங்க

டிராக்டர் பேரணி

பஞ்சாப்பில் அடுத்தடுத்து போராட்டங்களில் பங்கேற்ற ராகுல் காந்தி இன்று 3-வது நாளாக டிராக்டர் பேரணி நடத்தினார். டிராக்டரை ஓட்டியபடி பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஹரியானாவுக்குள் ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் ராகுல் காந்தி செல்ல முயன்றார்.

ஹரியானா எல்லையில் தடுப்பு

ஹரியானா எல்லையில் தடுப்பு

ஆனால் ஹரியானா எல்லையில் ராகுல் காந்தியை அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஹரியானா எல்லையில் காத்திருப்பு போராட்டத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார். அவருடன் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், காங்கிரஸ் தொண்டர்கள் இணைந்தனர்.

5,000 மணிநேரம் காத்திருப்பேன்

5,000 மணிநேரம் காத்திருப்பேன்

மேலும் ஹரியானாவுக்குள் பேரணியை அனுமதிக்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என்றும் 1 மணிநேரம், 5 மணிநேரம் என்ன 5,000 மணிநேரம் வரை காத்திருக்கவும் தாம் தயார் என்றும் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

ஹரியானாவுக்குள் ராகுல் அனுமதி

ஹரியானாவுக்குள் ராகுல் அனுமதி

இதனையடுத்து ஹரியானாவுக்குள் 100 பேருடன் மட்டுமே ராகுல் பயணம் மேற்கொள்ளலாம் என அம்மாநில அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதனை ராகுல் காந்தியும் பேரணி ஏற்பாட்டாளர்களும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். ஹரியானாவின் குருஷேத்ரா மாவட்டத்தில் விவசாய சட்டங்களுக்கு எதிரான பேரணி, பொதுக்கூட்டங்களில் ராகுல் பேசுகிறார்.

மோடி அரசின் தாக்குதல்

மோடி அரசின் தாக்குதல்

முன்னதாக பஞ்சாப்பின் பாட்டியாலாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, தேசத்தின் உணவு கட்டமைப்பு முறையையே நாசமாக்குகிறது மோடி அரசின் விவசாய சட்டங்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது விவசாய சட்டங்கள். இந்த சட்டங்கள் அனைத்தும் விவசாயிகள் மீதான கொடூர தாக்குதல் என சாடினார்.

English summary
Congress leader Rahul Gandhi allowed to enter the Haryana from Punjab as part of rally against Farmer Bills.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X