சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவமானம், விரக்தி.. கலங்கிய அமரீந்தர்.. பஞ்சாப் முதல்வரான சரண்ஜித்- 25 வருடத்தில் இல்லாத குழப்பம்

Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப்பில் கடந்த 25 வருடமாக இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.

பஞ்சாப்பின் முதல்வர் பதவியில் இருந்தது கேப்டன் அமரீந்தர் சிங் பதவி விலகி இருக்கிறார். அங்கு கடந்த சில மாதமாக காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் அமரீந்தர் சிங்கிற்கும் இடையில் கடும் மோதல் நிலவி வந்தது. பல்வேறு முறை தேசிய அளவிலும் மாநில அளவிலும் கூட்டங்கள் நடந்தும் இந்த மோதல் சரி தீர்ந்தபாடில்லை. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக திரும்பியது.

முதல் பரிசு குக்கர்; 2-ம் பரிசு ஹாட் பாக்ஸ்; 3-ம் பரிசு டிபன் பாக்ஸ்; வாங்க... வந்து ஊசி போடுங்க..!முதல் பரிசு குக்கர்; 2-ம் பரிசு ஹாட் பாக்ஸ்; 3-ம் பரிசு டிபன் பாக்ஸ்; வாங்க... வந்து ஊசி போடுங்க..!

இதில் 50 எம்எல்ஏக்களுக்கும் அதிகமானோர் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் பதவி விலகி இருக்கிறார். தனக்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிவிட்டு இவர் ராஜினாமா செய்துள்ளார். இதனால் நவ்ஜோத் சிங்கின் கை இதனால் பஞ்சாப்பில் ஓங்கி உள்ளது. நவ்ஜோத்திற்கு கொஞ்சம் நெருக்கமாக பார்க்கப்பட்டவரான சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப்பின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பஞ்சாப்பில் தலித் பிரிவை சேர்ந்த முதல் முதல்வர் இவர்தான்.

25 வருடம்

25 வருடம்

25 வருடங்களுக்கு பிறகு பஞ்சாப்பில் மிகப்பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு 1997ல் இருந்து அரசியல் குழப்பம் இல்லாமல் இருந்தது. பிரகாஷ் சிங் பாதல் மற்றும் அமரீந்தர் சிங் முதல்வராக மாறி மாறி இருந்த நிலையில் தற்போது மீண்டும் அரசியல் குழப்பம் அங்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்பெல்லாம் பஞ்சாப்பில் அடிக்கடி முதல்வர்கள் மாற்றப்பட்டு வந்தனர். அங்கு காலிஸ்தான் ஆதரவு போராட்டம் காரணமாக 25 வருடங்களுக்கு முன் அடிக்கடி ஆட்சி கலைக்கப்பட்டது. தற்போது இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் அங்கு ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மாற்றம்

மாற்றம்

பஞ்சாப் மாநிலம் 1966ல் உருவாக்கப்பட்டது. அதில் இருந்து 1997 வரை காங்கிரசின் கியானி செயல் சிங் மட்டுமே முழுவதுமாக 5 வருடம் அங்கு முதல்வராக இருந்தார். வேறு யாரும் அங்கு 1997க்கு முன் யாரும் முழுவதுமாக 5 வருடம் முதல்வராக இருந்தது இல்லை. 1968ல் குடியரசுத் தலைவர் ஆட்சி, 1971ல் குடியரசுத் தலைவர் ஆட்சி பின்னர் பஞ்சாப்பில் நடந்த காலிஸ்தான் போராட்டங்களால் மீண்டும் 1987ல் இருந்து 1992 வரை அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி இருந்தது. பஞ்சாப்பில் மாறி மாறி குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்ற நிலையில் 1992ல் காங்கிரசின் பியாண்ட் சிங் முதல்வர் ஆனார்.

முதல்வர் கொலை

முதல்வர் கொலை

ஆனால் இவரின் கொலைக்கு பின் 1995ல் காங்கிரசின் ஹார்ச்சரன் சிங் முதல்வர் ஆனார். பின்னர் அவரும் தனிப்பட்ட காரணங்களால் ராஜினாமா செய்ய ராஜிந்தர் கார் பாதல் அங்கு முதல்வர் ஆனார். இவர் 82 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த பின் அவரின் பதவிக்காலமும் முடிந்து தேர்தல் நடைபெற்றது. இப்படி வரிசையாக யாருமே அங்கு 5 வருடம் ஆட்சியில் இல்லை. இதன்பின்தான் 1997ல் பஞ்சாப்பில் அரசியல் குழப்பம் முடிவிற்கு வந்தது. அங்கு சிரோன்மணி அகாலி தளம் சார்பாக பிரகாஷ் சிங் பாதல் 1997ல் இருந்து 2002 வரை 5 வருடம் முழுமையாக முதல்வராக இருந்தார். பின்னர் காங்கிரஸ் சார்பாக அமரீந்தர் சிங் 2002-2007 வரை 5 வருடம் முதல்வராக இருந்தார்.

 மாறி மாறி ஆட்சி

மாறி மாறி ஆட்சி

பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிரகாஷ் சிங் பாதல் 2007ல் இருந்து 2017 வரை முழுமையாக 10 வருடம் ஆட்சி செய்தார். பஞ்சாப்பில் சிரோன்மணி அகாலி தளம் முழுமையாக மூன்று முறை ஆட்சியில் இருந்தது. அதன்பின் மீண்டும் அமரீந்தர் சிங் காங்கிரஸ் சார்பாக ஆட்சிக்கு 2017ல் வந்த நிலையில் சரியாக தேர்தல் நடக்க 8 மாதங்கள் கூட இல்லாத நிலையில் ராஜினாமா செய்துள்ளார். 1997க்கு பின் 25 வருடங்கள் கழித்து முதல்வர் ஒருவர் அங்கு மீண்டும் முழுமையாக ஆட்சி செய்யாமல் பதவி விலகி இருக்கிறார்.

புதிய முதல்வர்

புதிய முதல்வர்

பஞ்சாப்பின் புதிய முதல்வராக சுக்ஜிந்தர் ரந்தாவா தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அம்ரித்சர் மற்றும் லாகூர் இடையே இருக்கும் மஜ்ஹா என்ற பகுதியை சேர்ந்தவர் ஆவார் சுக்ஜிந்தர் ரந்தாவா. இந்தியாவின் பஞ்சாப்பிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இருக்கும் மையம். இங்கிருந்து 50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒருவர் முதல்வர் ஆகிறார்.

English summary
Sukhjinder Randhawa to be CM of Punjab: Political turmoil after 25 years, CM elected from Majha after 50 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X