சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

50 ஆயிரம் கடன் கேட்க சென்ற டீக்கடைக்காரர்.. 51 கோடியை எப்போது கட்ட போறீங்க.. ஷாக் கொடுத்த வங்கி

Google Oneindia Tamil News

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் டீக்கடைக்காரர் ஒருவருக்கு ரூ 51 கோடி கடனை திருப்பிச் செலுத்துமாறு நோட்டீஸ் வந்ததை அடுத்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் ஜூலை 31 -ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தனது டீக்கடையை அவர் மூடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

Tea seller gets notice from bank to repay Rs 51 crore

மீண்டும் டீக்கடையை திறக்க வேண்டி, ரூ 50 ஆயிர்ம கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்திருந்தார். அவரது பெயர் மற்றும் சுய விவரங்களை சரி பார்த்த வங்கி அதிகாரிகள் நீங்கள் இந்த வங்கியில் ஏற்கெனவே ரூ 51 கோடி கடன் பெற்றுள்ளீர்கள்.

இப்போதும் மீண்டும் கடன் கேட்டால் எப்படி தருவது? முதலில் வாங்கிய கடனை கட்டுங்கள் என அதிகாரிகள் கூறியது ராஜ்குமாரை அதிர்ச்சி அடைய செய்தது.

ரஜினி இ-பாஸ் விவகாரம் - ஒன்றரை லட்சம் ஆவணங்களை ஆய்வு செய்யும் சென்னை மாநகராட்சி ரஜினி இ-பாஸ் விவகாரம் - ஒன்றரை லட்சம் ஆவணங்களை ஆய்வு செய்யும் சென்னை மாநகராட்சி

உடனே திடுக்கிட்ட ராஜ்குமார், "சாதாரண டீக்கடையை நான் நடத்தி வருகிறேன். இதுவரை எந்த வங்கியிலும் நான் கடன் வாங்கியதே இல்லை. அப்படியிருக்கும் போது எப்படி 51 கோடி கடனாக பெற்றிருப்பேன்? என கேட்டார்.

English summary
Tea Seller gets notice from bank to repay Rs 51 crore. He shocked after seeing the notice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X