சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காருக்குள் மனைவி.. பீஸ் கட்ட சென்ற கணவன்.. வந்து பார்த்த போது காரையும் காணோம் மனைவியையும் காணோம்!

Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் காரில் சாவியை வைத்து சென்றதால் காருடன் சேர்த்து அந்த நபரின் மனைவியையும் திருடர்கள் தள்ளிக் கொண்டு சென்றுவிட்டனர்.

திருடும் நபர்கள் சில நேரங்களில் நாம் வருந்தும்படியாகவும் சில நேரங்களில் சிரிக்கும்படியாகவும் செயல்களை செய்து விடுவர். இதுபோன்று காமெடி திருடர்களை நாம் சினிமாவில் பார்த்துள்ளோம்.

ஆனால் நிஜமாகவே ஒரு சம்பவம் சண்டிகரில் நடந்துள்ளது. காருடன் சேர்த்து ஓனரின் மனைவியையும் கடத்திச் சென்ற பலே திருடர்கள்!

பள்ளி

பள்ளி

ஆம்! பஞ்சாப் மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர் ராஜீவ் சந்த். இவர் தனது மனைவி ரித்துவுடன் வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு தனது குழந்தைகள் பயிலும் பள்ளிக்கு சென்றார். கல்விக் கட்டணம் செலுத்த தன்னுடைய காரில் சென்றுள்ளார். ரித்துவை காரிலேயே உட்கார வைத்துவிட்டு ராஜீவ் மட்டும் சென்றதால் கார் சாவியை எடுக்கவில்லை.

மாஸ்க் அணியவில்லை

மாஸ்க் அணியவில்லை

இதை அங்கு மாஸ்க் அணியாமல் இருந்த இருவர் கவனித்துள்ளார்கள். உடனே அவர்கள் திடீரென காரில் ஏறினர். ரித்து உள்ளே இருந்ததை பார்த்த இருவரில் ஒருவர் டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டு காரை ஸ்டார்ட் செய்தார். இன்னொருவர் ரித்து சப்தம் போடாமல் இருக்கும் வகையில் தடுத்து நிறுத்தினார்.

5 கி.மீ .தூரம்

5 கி.மீ .தூரம்

கார் நெடுஞ்சாலைக்கு சென்றபோது அதாவது 5 கி.மீ. தூரம் சென்றதும் அம்பாலா டோல்கேட் அருகே ரித்துவை அவர்கள் கீழே தள்ளிவிட்டு காரை ஓட்டிச் சென்றனர். பின்னர் இதுகுறித்து புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகிறார்கள்.

சினிமாவில்

சினிமாவில்

இந்த சம்பவத்தை பார்க்கும் போது சினிமாவில் உள்ள திருடும் காட்சிகளும் கடத்தும் காட்சிகளும்தான் நினைவில் வருகிறது. அதில் உச்சகட்டம் என்றால் ருத்ரா படத்தில் பாக்யராஜின் திருட்டு சம்பவம். இன்னொரு பெண்ணிற்கு பதிலாக அவருடைய அம்மாவை கடத்தும் காதலர்கள். அந்த வரிசையில் காருடன் சேர்த்து ஓனரின் மனைவியையும் தள்ளிக் கொண்டு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Thieves looted car in Punjab with owner's wife. Police investigation is on.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X