சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்க போன தடவையும் முட்டை.. இப்பவும் முட்டை.. தோல்வி பாஜகவுக்குத்தான்.. காங். தலைவர் பலே!

Google Oneindia Tamil News

சண்டிகர்: டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்படவில்லை, ஏனெனில் எங்கள் கட்சி ஏற்கனவே பூஜீயம் தான் வாங்கியது. இப்போதும் பூஜியமே வாங்கி இருக்கிறது. ஆனால் இது பாஜகவுக்கே பெரும் இழப்பு என காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரும் பஞ்சாப் அமைச்சருமான சாது சிங் தர்மசோட் கூறியுள்ளார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களிலும் பாஜக 8 இடங்களிலும் வென்றுள்ளன. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. வாக்கு சதவீதம் ரீதியாக பார்த்தால் பாஜக 32ல் இருந்து 38 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 54 சதவீத வாக்குகளை தக்கவைத்துள்ளது. ஆனால் காங்கிரஸ் வெறும் 4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

We were zero earlier, are zero now, so its a BJP defeat, not ours : Sadhu Singh Dharamsot

இந்நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர்களில் ஒருவரும் பஞ்சாப் அமைச்சருமான சாது சிங் தர்மசோட் டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து கூறுகையில், டெல்லி தேர்தலில் எங்கள் கட்சி தோற்கடிக்கப்படவில்லை, ஏனெனில் அதன் எண்ணிக்கை 2015 ல் இருந்ததைப் போல பூஜ்ஜியமாகவே இருக்கிறது. நாங்கள் முன்பு பூஜ்ஜியமாக இருந்தோம், இந்த முறையும் நாங்கள் பூஜ்ஜியமாக இருக்கிறோம். எனவே இது எங்களுக்கு தோல்வி அல்ல. இது பாஜகவுக்குதான் தோல்வி" என்று கூறினார்,

இந்த ஐந்து விஷயங்கள் தான்! மாநில தேர்தல்களில் பாஜக தொடர்ந்து தோற்க காரணம்!இந்த ஐந்து விஷயங்கள் தான்! மாநில தேர்தல்களில் பாஜக தொடர்ந்து தோற்க காரணம்!

இதற்கிடையில், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் செயல்திறனை "வெறுப்பு மற்றும் அழுக்கு அரசியலுக்கு எதிரான வளர்ச்சிக்கான வெற்றி" என்று பஞ்சாப் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஹர்பால் சிங் சீமா பாராட்டினார்.

117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபையில் 19 எம்.எல்.ஏ.க்களுடன் ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது.

English summary
Punjab Congress leader Sadhu Singh Dharamsot said that We were zero earlier, are zero now, so it's a BJP defeat, not ours
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X