சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நோ எக்ஸாம்.. நோ இண்டர்வியூ.. 1,234 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள்.. ரூ.62 ஆயிரம் வரை சம்பளம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    1,234 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள்.. ரூ.62 ஆயிரம் வரை சம்பளம்!

    சென்னை: தமிழகத்தில் கிராம சுகாதார செவிலியர் பணிகளுக்கான 1,234 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.19,500 முதல் அதிகப்பட்சமாக ரூ.62,000 வரை மாத சம்பளம் கிடைக்கும் இந்த பணிக்கு தகுதியும் விருப்பம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தமிழகத்தில் காலியாக உள்ள 1,234 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிப்பாணையை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பெண்கள் வரும் நவம்பர் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    தாம்பரத்தில் இருந்து அதிக தென்மாவட்ட ரயில்கள்? 2 மணி நேரத்திற்கு முன்பே புறப்பட தயாராகுங்க!தாம்பரத்தில் இருந்து அதிக தென்மாவட்ட ரயில்கள்? 2 மணி நேரத்திற்கு முன்பே புறப்பட தயாராகுங்க!

    பணியிடங்கள்

    பணியிடங்கள்

    கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurse / Auxiliary Nurse Midwife)
    காலி பணியிடங்கள்: 1234

    என்ன படித்திருக்கணும்

    என்ன படித்திருக்கணும்

    10-ஆம் வகுப்புடன் 18 மாத (Auxiliary Nurse Midwife / Multipurpose Health Workers - Female) செவிலியர் தகுதி படிப்பு அல்லது 12-ஆம் வகுப்புடன் கூடிய 2 வருட (Auxiliary Nurse Midwife / Multipurpose Health Workers - Female) செவிலியர் தகுதி படிப்பினை, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

    சம்பளம்

    சம்பளம்

    கிராம சுகாதார செவிலியர் பணிக்கு ரூ.19,500 முதல் அதிகப்பட்சமாக ரூ.62,000 வரை ஊதியம் வழங்கப்படும்

    விண்ணப்பிக்க வயது

    விண்ணப்பிக்க வயது

    அனைத்து பிரிவினருக்குக்கும் குறைந்த பட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். எஸ்சி எஸ்டி, பிசி, எம்பிசி, டிஎன்சி ஆகிய பிரிவினர் 57 வயது வரை விண்ணப்பிக்கலாம், ஒசி பிரிவினர் மட்டும் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    கடைசி தேதி

    கடைசி தேதி


    ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின், www.mrb.tn.gov.in இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 13.11.2019
    ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் 13.11.2019
    வங்கி மூலம் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் 15.11. 2019

    கட்டணம் எவ்வளவு

    கட்டணம் எவ்வளவு

    விண்ணப் கட்டணம் பொது மற்றும் ஒபிசி மற்றும் எம்பிசி பிரிவினருக்கு 600 ரூபாய் ஆகும். எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு (SC / SCA / ST / DAP(PH) / DW) 300 ரூபாய் தேர்வு கட்டணம் ஆகும். ஒருமுறை விண்ணப்பித்து தேர்வு கட்டணத்தை செலுத்திவிட்டால் செலுத்திய பணத்தை திரும்ப பெற முடியாது.

    தேர்வு எப்படி

    தேர்வு எப்படி

    கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்வாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். இந்த பணிக்கு நேர்முகத்தேர்வு எழுத்து தேர்வு இல்லை. முழு விவரங்களை www.mrb.tn.gov.in இணையதளத்தில் காணலாம்.

    English summary
    1,234 village health nurse jobs in tamilnadu , willing women's can apply to online by www.mrb.tn.gov.in website. no interview, no exam this posts
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X