சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் சட்டென குறைந்த கொரோனா திடீரென அதிகரிப்பு- 1276 பேருக்கு பாதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்று குறைந்த நிலையில் இன்று திடீரென அதிகரித்திருக்கிறது.

சென்னையில் செவ்வாய்க்கிழமையன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 919 ஆக மட்டும் இருந்தது. சென்னையில் 10 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,000-த்தை தாண்டியதாக இருந்தது.

இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு லாக்டவுனை மீண்டும் அமல்படுத்தவும் தமிழக அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று திடீரென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 919 என அறிவிக்கப்பட்டது.

1,276 Coronavirus Positives in Chennai

இது பல்வேறு விவாதங்களையும் எழுப்பியது. தமிழக அரசின் மருத்துவ வல்லுநர் குழுவில் இடம்பெற்றிருக்கும் டாக்டர் பிரதீப் கவுரும் இது தொடர்பான சந்தேகத்துடன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1276 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரித்ததால் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது என்பது அரசு தரப்பு கருத்து.

தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா பாதிப்பு- 48 பேர் பலிதமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா பாதிப்பு- 48 பேர் பலி

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கையானது 35,556 ஆக உயர்ந்துள்ளது.

English summary
1,276 coronavirus positive cases were reported in Chennai alone on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X