சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1.5 லட்சம் விநாயகரை தடையை மீறி வைப்போம் - இந்து முன்னணி காடேஸ்வரா சுப்ரமணியம்

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட இருக்கிறோம். தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் சிலைகளை கடந்த ஆண்டு எங்கெல்லாம் வைக்கப்பட்டதோ அங்கு எல்லாம் வைத்து வழிபடுவோம் என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார

Google Oneindia Tamil News

சென்னை: அரசு அனுமதி வழங்காவிட்டாலும், ஏற்கனவே ஏற்பாடு செய்தபடி தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என்றும் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவோம் என்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அரசின் தடையை மீறி விழா கொண்டாடுவோம் என்று கூறியுள்ளதால் பதற்றம் உருவாகியுள்ளது.

Recommended Video

    விநாய சதுர்த்தியை வீட்டிலேயே கொண்டாடுங்கள்..ஊர்வலம் வேண்டாம் - தமிழக அரசு

    கொண்டாட்டங்களும் பண்டிகைகளும் மகிழ்ச்சிக்காகத்தானே தவிர சோகமயமானதாக மாறிவிடக்கூடாது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்த ஆண்டு பங்குனி உத்திரம், சித்திரை திருவிழா, வைகாசி விசாகம், ஆனித்தேரோட்டம், ஆடிப்பெருந்திருவிழாக்களை மாநிலம் முழுவதும் நடைபெறவில்லை. லாக்டவுன் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் தங்களின் வீடுகளிலேயே பாதுகாப்பாக பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி விழா பல்லாயிரக்கணக்கானோர் கூடும் பண்டிகை. இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. அத்துடன், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாடவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    அம்மா அரசுக்கு சர்மாக்களின் சான்று தேவையில்லை.. எச்.ராஜாவை விளாசிய அதிமுக நிர்வாகி.. என்னாச்சு? அம்மா அரசுக்கு சர்மாக்களின் சான்று தேவையில்லை.. எச்.ராஜாவை விளாசிய அதிமுக நிர்வாகி.. என்னாச்சு?

    கண்டித்த நீதிமன்றம்

    கண்டித்த நீதிமன்றம்

    ஒரு நாளில் சுமார் 6000 பேருக்கு கொரோனா தொற்று, இந்த சூழலில் எப்படி விநாயகர் சதுர்த்தி விழாவை அனுமதிக்க முடியும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து உயர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கருத்து தெரிவித்த நீதிமன்றம், மனுதாரர் மனுவை திரும்பப்பெறாவிட்டால் அதிக அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்ய நேரிடும் என்றும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

    தமிழக அரசு கவனித்துக்கொள்ளும்

    தமிழக அரசு கவனித்துக்கொள்ளும்

    இந்த நிலையில் அரசின் தடையை மீறி ஊர்வலமாக எடுத்துச் சென்றால் இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் மற்றும் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்பழகன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு உத்தரவுகள் மீறப்பட்டால் அதை தமிழக அரசு கவனித்து கொள்ளும் என விளக்கமளித்ததுடன், இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக தெரிவித்து வழக்கை முடித்து வைத்தது.

    காடேஸ்வரா சுப்ரமணியம்

    காடேஸ்வரா சுப்ரமணியம்

    இந்த நிலையில் தடையை மீறி விழா நடத்துவோம் என்று கூறியுள்ளார் காடேஸ்வரா சுப்ரமணியம். வருகிற 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட இருக்கிறோம். தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் சிலைகளை கடந்த ஆண்டு எங்கெல்லாம் வைக்கப்பட்டதோ அங்கு எல்லாம் வைத்து வழிபடுவோம் என்றும் கூறியுள்ளார்.

    டாஸ்மாக்கில் வராதா?

    டாஸ்மாக்கில் வராதா?

    விநாயகர் சதுர்த்தி, ஊர்வலங்கள் நடத்த வேண்டும் என்று அனுமதி கேட்டு நாங்கள் வைத்த கோரிக்கைக்கு இப்போது வரை எந்த பதிலும் வரவில்லை. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. அங்கு மக்கள் கூட்டமாக கூடுகிறார்கள். அங்கு வராத கொரோனா விநாயகர் சதுர்த்தி விழாவில் வந்துவிடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இறைச்சிக்கடைகளில் கூட்டம்

    இறைச்சிக்கடைகளில் கூட்டம்

    இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் கூடுகிறார்கள். இதனை அரசு அதிகாரிகளோ, காவல்துறையோ கண்டு கொள்ளவில்லை. நாங்கள் அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு சிலைகளை வைக்கிறோம் என்று கூறினாலும் இந்த அரசாங்கம் எங்களை புறக்கணிக்கிறது என்றும் கூறியுள்ளார். தடையை மீறி சிலைகள் வைப்போம் என்று கூறியுள்ளார் பதற்றம் எழுந்துள்ளது.

    English summary
    Kadateswara Subramaniam, the state president of the Hindu Munnani said that the Hindu Munnani strongly condemned the ban imposed by the Tamil Nadu government on Ganesh Chaturthi 1.5 lakh Lord Ganesh idols will be placed across Tamilnadu he said. Why should security not be provided for the Chaturthi festival just like they provide it to TASMAC outlets he asks.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X