சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனாவை விடுங்க.. எல்லாம் போலி.. இதோ, தென் கொரியாவிலிருந்து தமிழகம் வந்தது 1.5 லட்சம் பிசிஆர் கிட்

Google Oneindia Tamil News

சென்னை: தென் கொரியாவில் இருந்து புதிதாக 1.5 லட்சம் கொரோனா சோதனை கருவிகள் (PCR) தமிழகம் வந்து சேர்ந்தன.

கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக்காக தமிழக அரசு, சீனாவிலிருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகளை வரவைத்தது. ஆனால் அது தவறான முடிவுகளை காட்டியதால் திருப்பியனுப்பப்பட்டது.

1.5 lakh new PCR test kits comes from South Korea to Tamilnadu

இந்த நிலையில், தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பிசிஆர் கிட்களை வாங்க அரசு ஆர்டர் செய்தது. பிசிஆர் என்பது ரேபிட் டெஸ்ட் போன்றது இல்லை. சற்று நேரம் எடுக்கும் என்றாலும், சரியான முடிவுகளை காட்டக்கூடியது.

இந்த நிலையில், முதல்கட்டமாக, கடந்த சனிக்கிழமை காலை 1 லட்சம் கிட்கள் தமிழக சுகாதாரத் துறைக்கு வந்து சேர்ந்தன. இன்று, மேலும் 1.5 லட்சம் கிட்கள், தமிழகம் வந்துள்ளன. இந்த கிட்கள் தமிழகத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளிலுள்ள, மருத்துவமனைகளுக்கு தேவையின் அடிப்படையில் பகிர்ந்து வழங்கப்படும். இதனால், பரிசோதனைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்.

வேகமாக வருகிறது.. வடஇந்தியாவை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகள்.. தமிழகத்திற்கும் வருமா.. உண்மை என்ன?வேகமாக வருகிறது.. வடஇந்தியாவை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகள்.. தமிழகத்திற்கும் வருமா.. உண்மை என்ன?

நாட்டிலேயே, தமிழகம்தான், அதிகப்படியான பரிசோதனைகளை செய்து வருகிறது. பிசிஆர் கிட்கள் அதிகரித்திருப்பதால், பரிசோதனை மேலும் பரவலாக்கப்படும்.

Recommended Video

    ஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை - இந்தியா காட்டம்

    திருச்சி போன்ற நகரங்களில் பரிசோதனை கருவி பற்றாக்குறை இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த பிரச்சினையை சரி செய்ய, பிசிஆர் கிட்கள் உடனடியாக, அங்கு அனுப்பப்பட உள்ளதாக, சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    English summary
    1.5 lakh new Corona Testing Devices (PCR) came from South Korea to Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X