சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சத்து 17 ஆயிரத்து 983 பேர் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதே போல், 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் 11 லட்சத்து 56 ஆயிரத்து 730 பேர் வாக்களிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் அமைதியாக நடந்து முடிந்தது. இதில், மொத்தம் 71.90 சதவீதம் தான் வாக்குப்பதிவாகியுள்ளது. மக்களவை தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் மொத்தம் 5 கோடியே 84 லட்சத்து 42 ஆயிரத்து
767 வாக்காளர்கள் உள்ளனர்.

1.64 crore voters did not vote In the Lok Sabha election

வடசென்னை மக்களவை தொகுதியில் 14 லட்சத்து 87 ஆயிரத்து 461 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் 63.48 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதே போல், மத்திய சென்னை தொகுதியில் 13 லட்சத்து 32 ஆயிரத்து 135 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 58.69 சதவீதம், அதாவது 7 லட்சத்து 81
ஆயிரத்து 860 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 5 லட்சத்து 50 ஆயிரத்து 275 பேர் வாக்களிக்கவில்லை.

பரமக்குடியில் கலவரம் தொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு... 3 பேர் கைது பரமக்குடியில் கலவரம் தொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு... 3 பேர் கைது

திருவள்ளூர் தொகுதியில் 19 லட்சத்து 46 ஆயிரத்து 242 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 71.68 சதவீதம் பேரும், அதாவது, 13 லட்சத்து 95 ஆயிரத்து 121 பேர் வாக்களித்துள்ளனர். 5 லட்சத்து 51 ஆயிரத்து 121 பேர் வாக்களிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தியும், சிறப்பு முகாம்களை நடத்தியும், அதற்கான பலன் முழுமையாக கிடைக்கவில்லை. மாறாக கடந்த 2014 ம் ஆண்டு தேர்தலை விட 2 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

English summary
11.56 lakhs voters did not vote In the By - election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X