சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. சென்னையில் 1.80 லட்சம் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தம்!

குற்றச் சம்பவங்களை குறைக்கும் நடவடிக்கையாக சென்னையில் காவல்துறையினர் சார்பில் 1.80 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷ்னர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் 1.80 லட்சம் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தம்!

    சென்னை: குற்றச் சம்பவங்களை குறைக்கும் நடவடிக்கையாக சென்னையில் காவல்துறையினர் சார்பில் 1.80 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷ்னர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    உலகம் முழுக்க சிசிடிவி கேமராக்கள் மூலம் பாதுகாப்பு வழங்குவது அதிகம் ஆகியுள்ளது. சென்னையிலும் சிசிடிவி பயன்பாடு தற்போது அதிகாரிகரித்துள்ளது. பொது பாதுகாப்பு தொடர்பாக பிரபல நடிகர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கூட்டம் என காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேறகொண்டு வருகின்றனர்.

    1.80 lakh CCTV cameras have been installed in Chennai

    அதே நேரம், வீடுகள், வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

    குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவதில் கண்காணிப்பு கேமிராக்கள், முக்கிய துருப்பாக உள்ளன. இந்தநிலையில், அடையாறு பகுதியில் 10,242 ரகசிய கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனை தொடக்கி வைத்த பின்னர் போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டியளித்தார்.

    அதில், சென்னை பாதுகாப்புமிக்க மாநகரமாக விளக்குகிறது என்றார். மேலும், சென்னயில் மாநகரில் 1.80 லட்சம் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்றும், விரைவில் அரசு நிதி கொண்டு மேலும் 1 லட்சம் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும் என்றார்.

    English summary
    1.80 lakh cameras have been installed in Chennai as an act of reducing crime says police commissioner AK Vishwanathan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X