சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக பாஜகவுக்கு 10 துணைத் தலைவர்கள்... சசிகலா புஷ்பா, நடிகை நமீதாவுக்கு முக்கியப் பதவி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு துணையாக 10 துணைத் தலைவர்களை நியமனம் செய்துள்ளது அக்கட்சியின் தேசியத் தலைமை.

அதில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், வி.பி.துரைசாமி, முருகானந்தம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் 5 துணைத் தலைவர்கள் உள்ள நிலையில் தமிழக பாஜகவில் 10 துணை தலைவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு இது தான் காரணம்... பாஜக மாநில தலைவர் எல்.முருகன் விளக்கம் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு இது தான் காரணம்... பாஜக மாநில தலைவர் எல்.முருகன் விளக்கம்

10 துணைத் தலைவர்கள்!

10 துணைத் தலைவர்கள்!

சுமார் 6 மாதங்களுக்கு மேலாக தமிழக பாஜகவில் தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில் அந்தப் பதவிக்கு எல்.முருகனை தேர்வு செய்தது அக்கட்சியின் தேசியத் தலைமை. அவர் பொறுப்பேற்றுக்கொண்ட சில நாட்களில் கொரோனா விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் முடங்கின. இந்நிலையில் இப்போது மீண்டும் கட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டத் தொடங்கியுள்ளார் எல். முருகன். இந்த தருணத்தில் அவரின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு பிரேக் போடும் வகையில் 10 துணைத் தலைவர்களை நியமித்துள்ளார் ஜே.பி.நட்டா.

ஈடு செய்ய

ஈடு செய்ய

தமிழக பாஜகவில் தலைவர் பதவியை எதிர்பார்த்து கிடைக்காத வருத்தத்தில் இருந்த நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் போன்றோர் இப்போது துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமிக்கும் துணைத் தலைவர் பதவி தரப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு இதேபோல் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியனுக்கு அப்போது மாநில துணைத் தலைவர் பதவி தரப்பட்டது . ஆனால் அவர் பெரியளவில் அதில் ஈடுபாடு காட்டாமல் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

இதேபோல் பாஜக கலைப்பிரிவு மாநில தலைவராக காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார். பல ஆண்டுகளாக கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாமல் இருந்த இவருக்கு இப்போது ஜாக்பாட் அடித்துள்ளது. மேலும், பாஜக இளைஞரணி மாநில தலைவராக மீண்டும் வினோஜ் பி.செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து மற்ற அணிகளின் தலைவர்களும் பெரும்பாலும் மாற்றப்படவில்லை. ஏற்கனவே பதவியில் இருப்பவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

மாநில பதவி

மாநில பதவி

திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளில் இருந்து மேலும் சில முக்கிய பிரமுகர்களை இழுக்க தீவிரமாக காய் நகர்த்தி வரும் தமிழக பாஜக, வி.பி.துரைசாமிக்கு மாநில அளவிலான பதவியை கொடுத்து, இதேபோல் புதிதாக வருபவர்களுக்கும் கட்சியில் முக்கியத்துவம் தரப்படும் என சமிஞ்கை காட்டியுள்ளது. இதனிடையே கே.டி.ராகவன், கரு.நாகராஜன் உட்பட 4 பேர் தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

செயற்குழு உறுப்பினர்

செயற்குழு உறுப்பினர்

நடிகைகள் கவுதமி, குட்டி பத்மினி, நமீதா, மதுவந்தி, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தமிழக பாஜகவின் செயற்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் அண்மையில் பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய பொதுக்குழுவில் தமிழகம் சார்பில் 39 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

English summary
10 deputy presidents appointed for tamilnadu bjp
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X