சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மொத்தம் 10 மாவட்டம்.. 8 கி.மீ எல்லை.. வீடு வீடாக விசிட்.. பிளான் 'கன்டெய்ன்மென்ட்'.. தமிழக அரசு செம

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்கள், சுகாதாரத்துறை கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது. வீடு வீடாக ஊழியர்கள் சென்று மக்களிடம் உடல் பரிசோதனை நடத்த உள்ளனர்.

Recommended Video

    கொரோனா வைரஸ் எந்த பொருளில் எவ்வளவு காலம் உயிருடன் இருக்கும்?

    சென்னையில் இன்று, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    1500 மாதிரிகளை பரிசோதித்ததில், 41 பாஸிடிவ், 61 மாதிரிகளுக்கு இன்னும் சோதனை நடக்கிறது. தனிமைப்படுத்து இருப்பவர்கள் வீட்டுக்கு வெளியே ஸ்டிக்கர் ஒட்டி உள்ளோம்.

    43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முன்பு தமிழக ஏர்போர்ட்டில் யார்யாரை ஸ்க்ரீன் செய்தோமோ, அவர்களின் பயண வரலாறு, அவர்கள் தொடர்பு கொண்டவர்கள் ஆகியோர் பெயர்களைத்தான், லிஸ்ட் எடுத்தோம்.

    வேறு மாநிலம்

    வேறு மாநிலம்

    இப்போது, வேறு எந்த ஒரு மாநில விமான நிலையத்திலும், இறங்கிவிட்டு, பஸ் அல்லது ரயில் மூலமாக தமிழகம் வந்திருந்தாலும் அவர்களையும் லிஸ்ட் எடுத்து வருகிறோம். எனவே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இவ்வாறு லிஸ்ட் எடுக்கப்பட்டனர். இன்னும் பல பக்கத்து மாநிலத்தில் இருந்து மேலும் பலர் வந்திருப்பார்கள். எனவே இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். அதிகமானோரை தனிமைப்படுத்துவது நல்லதுதான்.

    10 மாவட்டங்கள் ஏன்

    10 மாவட்டங்கள் ஏன்

    10 மாவட்டங்களில் இருந்துதான், 41 நோயாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்த 10 மாவட்டங்களில் நாளை முதல் தடுப்பு நடவடிக்கை திட்டத்தை நாங்கள் கையில் எடுக்கப் போகிறோம். 10 மாவட்ட கலெக்டர்களையும் கூப்பிட்டு உயரதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக வழிகாட்டு நெறிமுறைகளை கொடுத்தோம்.

    5 + 3 கிலோமீட்டர்

    5 + 3 கிலோமீட்டர்

    இதன்படி நாளை காலை முதல் மாலை வரை பாசிட்டிவ் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகள் இருக்கக்கூடிய இடத்தை சுற்றியுள்ள ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை கண்டைன்மெண்ட் மண்டலம் என்று அடையாளப்படுத்துவார்கள். அங்கிருந்து மேலும் மூன்று கிலோமீட்டர் பப்பர் ஜோன் என்று அழைக்கப்படும். ஆக மொத்தம் 8 கிலோமீட்டர். இந்த மண்டலத்தில் ஒவ்வொரு 50 வீட்டுக்கும் ஒரு பணியாளர் என்ற வகையில் நியமிப்போம். இந்த 50 வீடுகளையும் அவர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அங்கு வசிப்போருக்கு, இருமல் சளி, மூச்சுத்திணறல் இருக்கிறதா என்பதை இந்த ஊழியர்கள், சோதித்து பார்ப்பார்கள்.

    முதியவர்கள் லிஸ்ட்

    முதியவர்கள் லிஸ்ட்

    இந்த பணியாளர்களை டாக்டர்கள் போன்றோர் கண்காணிப்பார்கள். காய்ச்சல், இருமல் ஏதாவது இருந்தால் உடனடியாக அவர்களுக்கு முக கவசம் கொடுக்கப்படும். அவர்களின் குடும்பத்தாருக்கும் கொடுக்கப்படும். அந்தப் பகுதியில் 60 வயதிற்கு மேற்பட்டோர், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளோர் யார் யார் இருக்கிறார்கள் என்பதை அதிகாரிகள், லிஸ்ட் எடுப்பார்கள். அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருக்க சொல்ல போகிறோம். இதனால், சமூக பரவல் கட்டுப்படுத்தப்படும்.

    கவுன்சிலர்கள்

    கவுன்சிலர்கள்

    இதுதவிர நோயாளிகளை தொடர்பு கொண்டவர்களை விசாரித்து வருகிறோம். கடந்த 14 நாட்களில் நோயாளி என்னென்ன செய்தாரோ அவையனைத்தையும் லிஸ்ட் எடுக்க உள்ளோம். வீடுகளில் தனிமைப்படுத்தி இருப்பவருக்கு மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும் என்பதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டுப்பாட்டு அறையில் கவுன்சிலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தினமும் கவுன்சிலிங் கொடுக்கப்படும்.

    பணியிடமாற்றம்

    பணியிடமாற்றம்

    சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் தூத்துக்குடிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதில் உள்நோக்கம் இல்லை.
    நிர்வாக அடிப்படையில்தான் மருத்துவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பார். அவர் மாஸ்க் பற்றாக்குறை பற்றி பேசியதால் டிரான்ஸ்பர் செய்யப்பட்டதாக கூறுவதில் உண்மையில்லை. சுய உதவிக் குழுக்கள், சிறைச்சாலைகள், திருப்பூர் ஆலைகள் உள்ளிட்ட பல பகுதிகளிலும், மாஸ்க்குகளை தயார் செய்து வருகிறோம். இவ்வாறு பீலா ரஜேஷ் தெரிவித்தார்.

    English summary
    Tamil Nadu health secretary Beela Rajesh says that, containment zone will be start for coronavirus positive cases comes from 10 districts in Tamilnadu, so we are going to Executive containment plan on these districts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X