சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுதந்திர தினம்...தேசியக் கொடியின் பிறப்பு... வடிவமைத்தவர்... ஸ்வாரஸ்ய தகவல்கள்!!

Google Oneindia Tamil News

சென்னை: நாடு 74வது சுதந்திர தினத்தை நாளை கொண்டாட தயாராகி வருகிறது. சுதந்திரத்துக்குப் பின்னர் முதல் தேசியக் கொடியை செங்கோட்டையில் பறக்கவிட்டவர் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. தேசியக் கொடி, நாட்டில் ஒவ்வொருவரின் கவுரவமாகவும், நம்பிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

10 interesting facts about our Indian Tricolour Flag

''நமக்கு கிடைத்த சுதந்திரத்தின் அடையாளமாக தேசியக் கொடியை பார்க்கக் கூடாது. ஒவ்வொருவருக்கும் கிடைத்த சுதந்திரமாக பார்க்க வேண்டும்'' என்று மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு தெரிவித்து இருந்தார். இந்த தேசியக் கோடி எப்படி பிறந்தது என்று பார்ப்போம்:

  • இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்காலி வெங்கையா. ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி
  • தேசியக் கொடி 1947, ஜூலை 22ல், நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு சற்று முன்னதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • முதல் இந்திய தேசியக் கொடி 1906ல் ஆகஸ்ட் 7ஆம் தேதி பறக்கவிடப்பட்டது. கொல்கத்தாவில் இருக்கும் பார்சி பாகன் ஸ்கொயரில் ஏற்றப்பட்டது. பச்சை, மஞ்சள், சிவப்பு நிறத்தில் மூன்று கிடைமட்டமாக அமைக்கப்பட்டு இருந்தது. இது பழைய வடிவம்.
  • கொடியில் இருக்கும் காவி நிறம் தியாகம், தைரியத்தை குறிக்கிறது. வெள்ளை நிறம் உண்மையை குறிக்கிறது. பச்சை நிறம் வளத்தை குறிக்கிறது. கொடியின் நடுவில் இருக்கும் அசோக சக்கரம் தர்மத்தை குறிக்கிறது.
  • கொடியில் இருக்கும் அசோகா சக்கரத்தில் சமவெளி இடைவெளியில் 24 கோடுகள் உள்ளன.
  • காதி துணியால் தேசியக் கொடி உருவாக்கப்படுகிறது. கையால் நெசவு செய்யப்பட்ட, காட்டன் மற்றும் பட்டு துணியால் தேசியக் கொடியை மகாத்மா காந்தி நெசவு செய்து இருந்தார்.
  • இந்தக் கொடியை தயாரிக்கும் உரிமை காதி வளர்ச்சி மற்றும் கிராம தொழிற்சாலை கமிஷனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மற்ற ஏஜென்சிகளுக்கு பிரித்து வழங்குகின்றனர்.
  • 1953, மே 29 ஆம் தேதி முதன் முறையாக இந்திய தேசியக் கொடியை எவரெஸ்ட் மலையில் டென்சிங் நார்கை ஏற்றினார்.
  • 2002 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தேசியக் கொடியை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரண்டு நாட்களில் மட்டுமே ஏற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. மற்ற நாட்களில் ஏற்றக் கூடாது. ஆனால், 2002 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும்போது தேசியக் கொடியை ஏற்றலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தது.
  • பகல் நேரத்தில் மட்டுமே தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். அதன் மீது வேறு எந்த அடையாளங்களும் இருக்கக் கூடாது என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது.

ஜெய்ஹிந்த்.. குடியரசுத் தலைவர் விருது...தமிழகத்திலிருந்து 23 போலீசார் தேர்வு!! ஜெய்ஹிந்த்.. குடியரசுத் தலைவர் விருது...தமிழகத்திலிருந்து 23 போலீசார் தேர்வு!!

English summary
10 interesting facts about our Indian Tricolour Flag
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X