சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விவசாயிகளுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு... அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

Google Oneindia Tamil News

சென்னை: நடப்பாண்டில் விவசாயிகளுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

சட்டமன்ற கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், துறைவாரியான ஆய்வுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் கூட்டுறவுத் துறை ஆய்வு கூட்டம் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

10 thousand crores of rupees loan For farmers Says Minister Sellur Raju

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடப்பாண்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். தனியார் வங்கிகளுக்கு இணையாக, மாநில, மாவட்ட வங்கிகள் வங்கிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டுறவு வங்கிகளில் மக்கள் டெபாசிட் செய்வது 52 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளதாகவும் செல்லூர் ராஜூ பேசினார்.

முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு 8 ஆயிரம் கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க அறிவுறுத்தியதாகவும், ஆனால் 11 லட்சத்து 37 விவசாயிகளுக்கு 8 ஆயிரத்து 120 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு மீது யாரும் குற்றம் சொல்ல முடியாத அளவுக்கு வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் முடிவில் உண்மை உறங்கிவிட்டது, பொய் ஊர்வலம் வந்துவிட்டது. மக்கள்தான் ஏஜமானர்கள், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக எடுத்துக் கொள்வோம். மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையில் ஹிந்தி திணிப்பு உள்ளதாக எழுந்த புகார் குறித்து நாங்கள் பேசுவதை விட தமிழக முதல்வர் பேசினால்தான் சரியாக இருக்கும்.

நீட்டை தொடர்ந்து இந்திக்கும் ஆதரவு.. தமிழகத்தில் விரைவில் பிரச்சாரம்.. கிருஷ்ணசாமி தடாலடி அறிவிப்பு நீட்டை தொடர்ந்து இந்திக்கும் ஆதரவு.. தமிழகத்தில் விரைவில் பிரச்சாரம்.. கிருஷ்ணசாமி தடாலடி அறிவிப்பு

அவர் பார்த்து கொள்வார். நாடாளுமன்ற தேரதலில் தோல்விக்கு அதிமுகவே காரணம் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறி வருகிறார். யார் யாரோ கூறும் கருத்துக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. அதிமுக அரசு மீது யாரும் குற்றம் சொல்ல முடியாத அளவிற்கு நாங்கள் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் தமிழக மக்களுக்கு நிறைவேற்றியிருக்கிறோம். தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான வறட்சி நிலவி வருகிறது என்றார்.

கூட்டுறவுத்துறை சத்தமில்லாமல் சாதித்துள்ளதாக கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ, உள்ளாட்சி தேர்தலை பொருத்தவரை முதல்வர், துணை முதல்வர், கழக முன்னோடிகளின் வழிகாட்டுதல்படி செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் புதிய கல்விக்கொள்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது தான் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குள் எதையும் கூறுவதற்கு இல்லை என்றும் கூறினார்.

English summary
Minister Sellur Raju Said that target To 10 thousand crores of rupees loan For farmers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X