சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பயமிருந்தால் வரவேண்டாம் தியேட்டர்களுக்கு வரச்சொல்லி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை - குஷ்பு ட்வீட்

தியேட்டர்களுக்கு வருபவர்களின் பாதுகாப்பே எங்கள் முதன்மையான பொறுப்பு. அச்சம் இருந்தால் தியேட்டர்களுக்கு வராதீர்கள் என்று நடிகையும், பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தியேட்டர்களுக்கு வருபவர்களின் பாதுகாப்பே எங்கள் முதன்மையான பொறுப்பு. உங்கள் அச்சத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் தியேட்டருக்கு நிச்சயம் வந்தே தீர வேண்டும் என்று யாரும் உங்களை கட்டாயப்படுத்தவில்லை நடிகையும் பாஜக செய்தி தொடர்பாளருமான நடிகை குஷ்பு கூறியுள்ளார். ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

    என்னது…? தனிமனித இடைவெளி இல்லையா..? தியேட்டர்கள் ஓபன்.. அதிரும் சுகாதார நிபுணர்கள்..!

    தமிழகத்தில் கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் கடந்த 6 மாத காலமாக மூடப்பட்டு கிடந்தன. சினிமா தியேட்டருக்கு போய் விசிலடித்து படம் பார்த்த ரசிகர்கள் இதனால் சோர்வடைந்தனர். 100 நாட்கள் படம் ஓடிய தியேட்டர்கள் 200 நாட்கள் மூடப்பட்டதால் தியேட்டர் ஓனர்களுக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கொரோனா பரவல் குறைய குறைய தளர்வுகளின் அடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

    கொரோனா அச்சம் காரணமாக மக்கள் கூட்டம் வராததால் புது படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இதனிடையே முன்னணி நடிகர்களான விஜய், சிம்பு கோரிக்கை விடுத்ததையடுத்து தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது.

    சிலம்பரசன், விஜய்

    சிலம்பரசன், விஜய்

    பொங்கல் பண்டிகைக்கு சிலம்பரசன் நடித்துள்ள ஈஸ்வரன், விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அரங்கு நிறைந்த காட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. அதே நேரத்தில் ரசிகர்கள் அரசின் உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் சினிமா தியேட்டர் திறப்பதில் அரசின் புதிய உத்தரவுக்கு முதல்வருக்கு நன்றி கூறியுள்ளார்.

    நன்றி சொன்ன குஷ்பு

    தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைகளுடன் திரைப்படம் திரையிட அனுமதி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் மிக்க நன்றி. அதிக அளவு பொருளாதாரத்தை உருவாக்கும் துறையான திரைத்துறை நன்றாக செழிக்கும். பொழுதுபோக்கை மீண்டும் தரும் என்று பதிவிட்டுள்ளார்.

    தியேட்டருக்கு வர வேண்டாம்

    பாதுகாப்பு குறித்து கவலைப்படுபவர்களுக்கு ஒரு அறிவுரை, திரையரங்குகளால் பெரிய அளவில் தொற்று ஏற்படவில்லை. எனெனில் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தியேட்டர்களுக்கு வருபவர்களின் பாதுகாப்பே எங்கள் முதன்மையான பொறுப்பு. அச்சம் இருந்தால் தியேட்டர்களுக்கு வராதீர்கள் என்று பதிவிட்டுள்ளார் குஷ்பு.

    கட்டாயப்படுத்தவில்லை

    உங்கள் அச்சத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் தியேட்டருக்கு நிச்சயம் வந்தே தீர வேண்டும் என்று யாரும் உங்களை கட்டாயப்படுத்தவில்லை. ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார் குஷ்பு.

    English summary
    Actress Khushbu tweets, Those who have different opinions on 100% capacity functioning of cinema theaters, only one message for you. Pls don't go if you are worried. Your fear is understandable and nobody forces you to come. Take care says Khushbu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X