சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐஐடிக்கும் முறுகல் தோசைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? ஆஹா.. சாதனை!

கின்னஸ் சாதனைக்காக சென்னை ஐஐடியில் 50அடி நீளத்துக்கு தோசை சுடப்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கின்னஸ் சாதனைக்காக சென்னை ஐஐடி வளாகத்தில் 100 அடி தோசை-வீடியோ

    சென்னை: சென்னை ஐஐடிக்கும் முறுகல் தோசைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? ஆனால் வளாகம் பக்கம் சென்று கொண்டிருந்தவர்களை கமகம நெய் தோசை வாசம் மூக்கை துளைத்து இழுத்தை கண்டு நின்றேவிட்டார்கள்.

    அது வேறு ஒன்றுல்லை... கின்னஸ் சாதனைக்காக சென்னை ஐஐடி வளாகத்தில் தோசை சுட்டிருக்கிறார்கள். சாதா தோசையோ, ஸ்பெஷல் தோசையோ கிடையாது.. பிரம்மாண்டமான தோசை!!

    சரவணபவன் ஓட்டல் சமையல் கலைஞர்கள் 50 பேர் இணைந்து, 100 அடி அளவிலான தோசையை சுட்டு எடுத்திருக்கிறார்கள். இந்த பிரமாண்ட தோசையை சுட்ட டீமின் தலைவர் செஃப் வினோத். நடிகர் நகுல் மனைவி சுருதி, விஜய் டிவி மாகாபா ஆனந்த், போன்றோர் கலந்து கொண்ட இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பே பிரமாண்டம் என்றால், கின்னஸ் தோசை என்ன சும்மாவா?

    மொறு மொறு தோசை

    மொறு மொறு தோசை

    டிபனில் சிலருக்கு இட்லி பிடிக்காது, பலருக்கு உப்புமா பிடிக்காது.. ஆனால் தோசையை எல்லோருக்குமே பிடிக்கும். அதுவும் நெய் ஊற்றி மொறு மொறுன்னு தோசை சுட்டு தந்தால் யாராவது வேணாம்னு சொல்லுவாங்களா? அதனாலதான் எல்லாருக்கும் பிடித்த தோசையை கின்னஸ் சாதனைக்காக இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

    பிரமாண்ட கல்

    பிரமாண்ட கல்

    100 அடி தோசை சரி, அதை சுட்டு எடுக்கறதுக்கு கல் எங்க போறது? அதனால் தோசை கல்லை செய்து தரும்படி இன்ஜினியரிங் நிபுணர்களிடம் ஆலோசனை செய்து பெரிய தோசை கல் ரெடி செய்யப்பட்டது. இந்த கல் 180-200 டிகிரி வெப்பத்தில்தான் இருக்க வேண்டும். அதுக்கு கூடவோ குறையவோ கூடாது. கல்யாண வீட்டில் சாப்பிட பந்திக்கு டேபிள் போட்டு வைத்திருப்பார்களே... அப்படி இருக்கிறது அந்த கல் பார்ப்பதற்கு.

    50 வல்லுநர்கள்

    50 வல்லுநர்கள்

    நேற்று சாயங்காலம் இந்த ஒரே ஒரு தோசை சுடும் பணி ஆரம்பமானது. 20 கிலோ மாவு அரைத்து பக்கத்தில் வைத்து கொண்டு, 50 பேர் இதனை சுட வந்தார்கள். இவ்வளவு பேரும் சமையல் கலை வல்லுநர்கள் என்றாலும் நிறைய முறை தோசையை சுட்டு சுட்டு பார்த்து பிராக்டிஸ் செய்து கொண்டார்கள். அப்பறம்தான் மாவிலேயே கை வைத்தார்கள்.

    குவிந்த மக்கள்

    குவிந்த மக்கள்

    தோசை கல்லில் ஊற்றப்பட்டதும் ஒரு பெரிய கின்னத்தை கையில் வைத்து கொண்டு, அதிலிருந்து தண்ணி ஊற்றுவதை போல, கரண்டியில் நெய்யை எடுத்து தோசை முழுவதும் அள்ளி அள்ளி தெளித்து வருகிறார்கள். அப்போது மைக்கில் ஒருவர் இவ்வளவு நேரத்திற்குள் தோசை சுட வேண்டும் என விதி என்பதால் டைமிங் சொல்லி கொண்டு அலார்ட் பண்ணி கொண்டே இருந்தார். இந்த தோசையை பார்க்க நிறைய பேர் குவிந்திருந்தார்கள்.

    தகதகவென மின்னியது

    தகதகவென மின்னியது

    கடைசியில் தோசை சுட்டு முடிக்கப்பட்டு, அது கல்லிலிருந்து எடுக்கப்பட்டது. சரவண பவன் ஹோட்டலில் கொண்டு வந்து தட்டில் முறுகலாக வைப்பது போலவே இந்த தோசையும் பார்ப்பதற்கு இருந்தது. ஒரே ஒரு தோசை என்றாலும் தகதகவென நெய் மின்னியது. பெரிய தோசை சுட்டுவிட்டார்கள் என்பதால் மட்டும் கின்னஸ் ரெக்கார்ட் ஆகாது.

    கின்னஸ் ரெக்கார்ட்

    கின்னஸ் ரெக்கார்ட்

    எவ்வளவு நேரத்தில் இது சுடப்பட்டது, எத்தனை பேர் சேர்ந்து இதை சுட்டார்கள், எவ்வளவு எடை உள்ள பொருட்களை வைத்து இந்த தோசை சுடப்பட்டது... என்பது உட்பட பல விஷயங்களை ஆராய்ந்துதான் கின்னஸ் விருது தருவார்களாம். இதுக்கு முன்னாடி ஐதராபாத்தில், 54 அடி 8.65 இஞ்ச் நீள தோசைதான் கின்னஸ் சாதனையாக இருந்திருக்கிறது. இப்போ நம்ம ஆளுங்க சுட்ட இந்த தோசைதான் அடுத்ததாக கின்னஸ்-க்கு வரப்போகுது.

    English summary
    In Chennai IIT Guinness record attempt to make the Largest Dosa in the world
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X