சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன வேலை இருந்தாலும் சரி.. தூக்கி போடுங்க.. தயவு செய்து ஓட்டு போடு நண்பா..!

சமூக வலைதளங்களில் வாக்களிக்க பொதுமக்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாக்குப்பதிவு- வீடியோ

    சென்னை: "டிவியில யாரும் மூழ்கி போய் உட்காராதீங்க", "தயவு செய்து ஓட்டுபோடு நண்பா" என்று பலரும் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் தகவல்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    பொதுவாக 100 சதவீத வாக்கு என்ற விஷயங்களை தேர்தல் ஆணையம்தான் முன்னெடுத்து செல்லும். ஆனால் இந்த முறை பொதுமக்களே இது குறித்து ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    இதற்கு முந்தைய தேர்தல்களில் இவ்வளவு விழிப்புணர்வு இருந்ததா என்று தெரியவில்லை. இந்த முறை மலைத்து போகும் அளவுக்கு உள்ளது!

    வேலூரில் செலவு செய்த பணம் வீண்.. தேர்தல் ஆணையம் திருப்பி கொடுக்குமா? சீமான் கிடுக்குப்பிடி! வேலூரில் செலவு செய்த பணம் வீண்.. தேர்தல் ஆணையம் திருப்பி கொடுக்குமா? சீமான் கிடுக்குப்பிடி!

    பிரபலங்கள்

    பிரபலங்கள்

    இப்போது மீடியா ஒரு பெரிய பலம் வாய்ந்த சக்தியாக உள்ளது. இதனை பயன்படுத்தி பலரும் வாக்களிக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகின்றனர். இதில் சினிமா பிரபலங்கள், தனிநபர்கள் என அனைவருமே களம் இறங்கி விட்டனர்!

    வா நண்பா..

    இதில் "உனக்கு, என்ன வேலை இருந்தாலும், தயவு செய்து, ஓட்டுப் போடு நண்பா.. போடு, ஓட்டுப் போடு" என்றும், "என் ஓட்டு, கெட்டவங்களுக்கு வேட்டு'" போன்ற வாசகங்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

    டிவி வேண்டாம்

    டிவி வேண்டாம்

    மேலும், "நாம் ஓட்டு போட வருவதை தடுக்க, அரசியல்வாதிகள் கலவரம் ஏற்படுத்தியும், பயம் காட்டுவர்.. அதற்கு எல்லாம் பயப்படாமல், 'டிவி'யில் மூழ்காமல், ஓட்டுப் போட வேண்டும்" என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.

    வருத்தம் தருகிறது

    வருத்தம் தருகிறது

    சமூக வலைதளங்களில் முகம் தெரியாதவர்களைகூட இப்படி உரிமையாக அழைப்பு விடுத்து வருவதை பார்க்கவும், படிக்கவும் சந்தோஷமாக இருக்கிறது.. ஆனாலும் சென்னையில் இன்னும் வாக்குப் பதிவு விறுவிறுப்படையவில்லை. மத்திய சென்னையில் மிகவும் குறைந்த அளவிலேயே வாக்குகள் பதிவாகியிருப்பது வருத்தம் தருவதாகவே உள்ளது.

    English summary
    "Come and Vote" 100 Percent Vote Emphasize awareness in Social Media
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X