சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுட்டெரிக்கிறது வெயில்… திருத்தணியில் அதிகபட்ச வெயில் பதிவு

Google Oneindia Tamil News

Recommended Video

    வெயில் கொடுமை..ஜுன் 10 வரை கோடை விடுமுறை நீட்டிப்பு- வீடியோ

    சென்னை : தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக திருத்தணியில் 104.8 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. வெளுத்து வாங்கி வரும் வெயிலால், மக்கள் உஷ்ண மூச்சு விட்டு வருகின்றனர்.

    கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பாகவே வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தலைநகர் சென்னை உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

    104.8 degrees Fahrenheit sunny Record in Thiruttani

    அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் இன்னும் ஆரம்பிக்க ஒன்றரை மாதங்கள் இருக்கும் நிலையில், குறிப்பாக தலைநகர் சென்னையில் வெயிலின் தாக்கம் என்பது சற்று அதிகமாக உள்ளது .இதனால், மதிய நேரங்களில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர் .

    கேள்விப்பட்டேன்.. நம்ம ஊருக்கும் வந்தா நல்லாருக்கும்.. விவேக் ஆதங்கம்! கேள்விப்பட்டேன்.. நம்ம ஊருக்கும் வந்தா நல்லாருக்கும்.. விவேக் ஆதங்கம்!

    கடந்த 2017-ம் ஆண்டு பருவமழையுடன் ஒப்பிடுகையில் 2018ம் ஆண்டு இறுதியில் பருவமழை பொய்த்து விட்டதன் காரணமாக இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

    தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் சதம் போட்டு வருகிறது. மதிய நேரத்தில் வெயிலின் தாக்கத்தை தீர்த்துக் கொள்வதற்காக பொதுமக்கள் சாலையோரங்களில் உள்ள குளிர்பான கடைகள் மற்றும் தர்பூசணி கடைகளுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர் . இதனால் வியாபாரம் களை கட்ட தொடங்கியுள்ளது

    English summary
    Record the maximum sunny in Thiruttani
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X