கொரோனா டேஞ்சர் ஜோனாக விஸ்வரூபமெடுக்கும் சென்னை ஐஐடி- மேலும் 11 பேருக்கு தொற்று- மொத்த பாதிப்பு 182
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த போதும் சென்னை ஐ.ஐ.டி.யில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை ஐஐடியில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை ஐஐடியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டின் வட இந்திய மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளன.

அதேநேரத்தில் சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மொத்தம் 4,974 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை ஐ.ஐ.டி.யில் நேற்று வரை மொத்தம் 171 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. சென்னை ஐ.ஐ.டியில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது உருமாறிய கொரோனா வைரஸ் அல்ல என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனாவால் பாத்க்கப்பட்டோர் குணமடைந்து வருவதும் அதிகரித்து வருகிறது எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டியில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் சென்னை ஐ.ஐ.டி.யில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video - Watch Now
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பரவக் கூடிய மிகப் பெரிய அபாய பகுதியாக சென்னை ஐ.ஐ.டி. உருவெடுத்திருக்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பரவல் பதிவுகள் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.