சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரும்பாக்கத்தில் 1152 குடியிருப்புகள், குத்தப்பாக்கத்தில் 150 கோடியில் புதிய பஸ் நிலையம்: ஓபிஎஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்..! முதல்வர் அறிவிப்பு...

    சென்னை: சட்ட சபையில் இன்று 2019-2020 ஆம் ஆண்டிற்கான நிதித்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பங்கேற்று பதிலளித்தார். அப்போது பல அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

    சென்னை, பெரும்பாக்கம் பகுதியில் 1152 குடியிருப்புகள், ரூ.121.01 கோடி செலவில் அமைக்கப்படும்.

    1152 apartments in the Perumbakkam area in Chennai will be set up: OPS

    4860 கோடி செலவில் குடிசை பகுதிகளில் நகர்ப்புறங்கள் அமைக்கப்படும். இதற்காக 24000 அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும். பொருளாதாரத்தில் நலிவுற்ற குறைந்த வருவாய் பிரிவினருக்கு இந்த அடுக்குமாடி குடியிருப்பு வழங்கப்படும். அதில் 1000 அடுக்குமாடி குடியிருப்புகள் நடப்பாண்டில் கட்டி முடித்து விற்பனை செய்யப்படும்.

    சென்னை உட்பட மாவட்டங்களில் 349 கோடி செலவில் குடியிருப்பு அலகுகள் கட்டிக் கொடுக்கப்படும். திருமழிசை அருகேயுள்ள, குத்தப்பாக்கம் கிராமத்தில் 150 கோடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும்.

    கோயம்பேட்டில் 3 ஏக்கர் பரப்பில், 40 கோடி ரூபாய் செலவில் மலர் அங்காடி விரிவுபடுத்தப்படும். திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில், ரூ.12.75 கோடியில் மாணவியர் விடுதி அமைக்கப்படும்.

    இவ்வாறு பல அறிவிப்புகளை வெளியிட்டார் ஓ.பன்னீர் செல்வம்.

    English summary
    1152 apartments in the Perumbakkam area in Chennai will be set up at a cost of Rs 121.01 crore. 4860 crore worth buildings will be set up in slum areas.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X