சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'தமிழ் மொழி' 2300 ஆண்டுகள் தான் பழமையானதா.. 12ம் வகுப்பு ஆங்கில பாட புத்தகத்தில் சர்ச்சை பாடம்

Google Oneindia Tamil News

சென்னை: 12 வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் தமிழ் மொழி கிமு 300 ஆண்டுகள் பழமையானது என குறிப்பிப்டபட்டு இருப்பது சர்ச்சை ஏறபடுத்தி உள்ளது. இதற்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆங்கில பாடப்புத்தகத்தில் தொன்மையான மொழிகள் உருவான ஆண்டுகள் கறித்து கலிஃபோர்னியா பல்கலைக்கழக தமிழ் பேராசிரியான ஜார்ஜ் எல்.ஹெர்ட் என்பவர் எழுதிய பாடம் இடம் பெற்றுள்ளது.

12 class english book say , tamil language only 2300 years old , tamilisai condemns

அதில் தமிழ் கி.மு. 300ஆண்டில் உருவானதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதேநேரம் சீன மொழி கி.மு. 1250 ஆண்டிலும், சமஸ்கிருதம் கி.மு.2000 ஆண்டிலும், கிரேக்கம் கி.மு.1500 ஆண் ஆண்டிலும் உருவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மொழி உருவாகி 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகி உள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் கூறிவருகிறார்கள். இதேபோல் தமிழின் புகழ் பெற்ற இலகியமான தொல்காப்பியம் உருவாகி 2500 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் கூறப்பபடுகிறது. அப்படி இருக்கும் சூழலில் தமிழ் மொழியை எப்படி புதிய பாடத்திட்டத்தில் வெறும் 2 ஆயிரத்து 300 ஆண்டுகள் மட்டுமே பழமையானது என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்று தமிழ்ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தமிழ்மொழி குறித்து பாடப்புத்தகத்தில் வெளியான தவறாக கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஞதொன்மைமையுடைய நம் முதுமொழி தமிழ்.300 ஆண்டுகள்தான் பழமைமையானது என்று12 ம்வகுப்புபாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டிருப்பதாக,வந்திருக்கும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இது வன்மையாக் கண்டிக்கத்தக்கது உடனே மாற்றப்படவேண்டும்,தவறு நடக்க காரணமானவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.

English summary
12 class english book say , tamil language only 2300 years old , tn bjp leader tamilisai condemns this issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X