சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மொத்தம் 13 பேர்.. விடிய விடிய ஓட்டை போட்ட போலீசார்.. திரண்ட மக்கள் கூட்டம்.. சென்னையில் பரபரப்பு

நகை கடையில் ஷட்டர் மூடிக் கொண்டதால் 13 பேர் சிக்கி கொண்டனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    13 workers were trapped inside the tanishq jewellery shop

    சென்னை: மொத்தம் 13 பேர்.. ஷட்டர் மூடிக் கொண்டதால், அப்படியே லம்ப்பாக நகைக்கடைக்குள்ளேயே பெண் உட்பட இவர்கள் விடிய விடிய சிக்கி கொண்டார்கள்!

    சென்னை அடுத்த தாம்பரம் அருகே செம்பாக்கத்தில் தனிஷ்க் என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு கஸ்டமர்கள் எல்லாரும் சென்றுவிட்ட பிறகு, கடையை மூடிவிட்டு வீட்டுக்கு கிளம்பலாம் என ஊழியர்கள் நினைத்தனர்.

    13 people were trapped inside the jewellery shop as the shutter closed

    அதற்காக கடையை மூடுவதற்கு ஒருசில நிமிஷங்களுக்கு முன்பாக அங்கிருந்த ஆட்டோமெட்டிக் ஷட்டர் திடீரென தானாகவே மூடிக் கொண்டது. அதனால் எலக்ட்ரானிக் பூட்டும் தானாகவே பூட்டிக்கொண்டது.

    அப்பாடா.. ரொம்ப நன்றிப்பா.. கொள்ளையன் முருகனுக்கு நன்றி சொன்ன லலிதா ஜுவல்லரி ஓனர்!

    இதனால் கடையில் இருந்த பெண் ஊழியர்கள் உள்ளிட்ட 13 பேரும் அலறி விட்டனர். அந்த ஷட்டரை திறக்க முயற்சித்தாலும் அவர்களால் முடியவில்லை.. கடைக்குள்ளேயே வசமாக சிக்கிவிட்டனர்.

    அதனால் ராத்திரி 11 மணிக்கு சேலையூர் போலீசாருக்கு தகவல் சொன்னார்கள். இதையடுத்து, போலீசாரும், தீயணைப்பு துறையினரும் கடைக்கு வந்துவிட்டார்கள். தீயணைப்பு துறையினர் முயற்சித்தும் ஷட்டரை திறக்க முடியவில்லை. அதனால் வெல்டிங் மிஷின் வைத்துதான் ஓட்டை போட்டு அவர்களை வெளியே கொண்டு வர முடியும் என்று முடிவு செய்தனர்.

    அதன்படியே ஒரு ஆள் வெளியே வரும் அளவுக்கு ஷட்டரை வெல்டிங் மிஷினால் ஓட்டை போட ஆரம்பித்தனர். இதுக்கே ராத்திரி முழுவதும் ஆகிவிட்டது. அந்தநேரத்தில் கடைக்குள் உள்ள நகைகள் திருடு போகாமல் இருக்க போலீசார் அதையும் ஒரு பக்கம் கண்காணித்து கொண்டே இருந்தனர். காலையில்தான் ஒவ்வொருத்தராக ஓட்டை வழியாக வெளியே வந்தனர்.

    பிறகு அந்த ஓட்டையை சீரமைக்கும் பணி நடைபெற்றது. தீபாவளி டைம் என்பதால், கடைக்கு கஸ்டமர்கள் காலையில் சீக்கிரமாக வர ஆரம்பித்துவிட்டனர். ஷட்டரில் ஓட்டை போடப்பட்டிருந்ததாலும், போலீஸ்காரர்கள் கடையை சுற்றி நின்றிருந்ததாலும் வந்திருந்த கஸ்டமர்கள் பயந்து விட்டனர். திரும்பவும் ஏதாவது நகை கொள்ளையா என்று பதட்டம் ஆனார்கள்.. இவர்களை பார்த்து பொதுமக்களும் அங்கு வேடிக்கை பார்க்க திரண்டு வந்துவிட்டனர். அதனால் கொஞ்ச நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    13 workers including female staffs were trapped inside the tanishq jewellery shop in chennai due to automatic shutter closed
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X