சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் கடற்கரைகள், சுற்றுலா தலங்களில் பொதுமக்களுக்கான தடை தொடரும்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கடற்கரைகள், சுற்றுலா தலங்களில் பொதுமக்களுக்கான தடை தொடரும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

144 continued in beaches, tourist places in Tamilnadu

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

  • நீச்சல் குளங்கள், கடற்கரை, சுற்றுலா தலங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள்
  • மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
  • வெளிமாநிலங்களிலிருந்து (புதுச்சேரி தவிர) தமிழகம் வருவோர்களுக்கும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்பவர்களுக்கும் தற்போது நடைமுறையிலுள்ள இ பதிவு (E Registration) முறை தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

தமிழகத்தில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் தியேட்டர்கள், பொழுதுப்போக்கு பூங்காக்களுக்கு அனுமதி தமிழகத்தில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் தியேட்டர்கள், பொழுதுப்போக்கு பூங்காக்களுக்கு அனுமதி

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். குறிப்பாக நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில் பொதுமக்கள் பண்டிகை காலங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

English summary
144 to be continued in beaches, swimming pools, tourist places in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X