சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை டூ பெங்களூரு எக்ஸ்பிரஸ் வே சாலை.. பணிகள் எப்போது முடியும்?.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

எக்ஸ்பிரஸ் வே சாலை பெங்களூரு - சென்னை இடையேயான பயண நேரத்தை 2 முதல் 3 மணி நேரமாக குறைக்கும்.

Google Oneindia Tamil News

டெல்லி: பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் வே சாலையானது கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு வழியாக செல்கிறது. இந்த சாலை பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டின் தொகை 16,730 கோடியாகும். தற்போது சென்னை டூ பெங்களூரு எக்ஸ்பிரஸ் வே சாலையில் தமிழ்நாட்டில் உள்ள 96.1 கி.மீட்டர் தூரத்தில்14.4 கி.மீட்டர் தூரத்திற்கான பணிகள் முடிந்துள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கு அதன் சாலை கட்டமைப்புகளும் இன்றியமையாததாக உள்ளது. இதனால், நாடு முழுவதும் சாலை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில், நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை - பெங்களூர், பெங்களூர் - மைசூர் எனப் பல நெடுஞ்சாலை பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது.

 சென்னை-பெங்களூரு விரைவு சாலை

சென்னை-பெங்களூரு விரைவு சாலை

சென்னை-பெங்களூரு இடையேயான 326 கி.மீ. தூரத்துக்கான விரைவுச் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. நாட்டில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய சாலைகளில் ஒன்றாக இது உள்ளது. இந்த சாலை வழியாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல சுமார் 5 முதல் 7 மணி நேரம் வரை ஆகிறது. இந்த பயண நேரத்தை குறைக்கும் விதமாகவும் பாதுகாப்பான பயணமாக மாற்றும் வகையிலும் சாலையை விரிவு படுத்தும் பணிகளை இந்திய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மேற்கொண்டு வருகிறது.

 4 பேக்கேஜ்களாக பணிகள்

4 பேக்கேஜ்களாக பணிகள்

தமிழகத்தில் இந்தப் பணிகள் 4 பேக்கேஜ்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, குடிப்பாலா-வாலாஜாப்பேட்டை இடையே 24 கி.மீ. தூரத்துக்கும், வாலாஜாப்பேட்டை-அரக்கோணம் இடையே 24.5 கி.மீ. தூரத்துக்கும், அரக்கோணம்-காஞ்சிபுரம் இடையே 25.5 கி.மீ. தூரத்துக்கும், காஞ்சீபுரம்-ஸ்ரீபெரும்புதூர் இடையே 32.1 கி.மீ. தூரத்துக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த 4 பேக்கேஜ்களிலும் மொத்தம் உள்ள 96.1 கி.மீட்டர் தூரத்தில் 10 கி.மீட்டர் ஆந்திர மாநிலத்திற்குள் வருகிறது.

 15-16 மாதத்துக்குள் முடியும்

15-16 மாதத்துக்குள் முடியும்

இந்த சாலை பணிக்காக 833.91 ஹெக்டேர் நிலம் கையக்கப்படுத்த வேண்டிய நிலை இருந்தது. இதில் 95 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள நிலங்கள் விரைவில் கையகப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சாலையில் தமிழகத்தில் 54 பாலங்கள் மற்றும் 13 சுரங்க பாதைகள், சுங்கச்சாவடிகள் அமைகின்றன. தமிழ்நாட்டில் வரும் மொத்த சாலை தூரமான 96.1 கி.மீட்டர் தூரத்தில் 14.4 கி.மீட்டர் தூரத்திற்கான பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள பணிகள் அடுத்த 15 முதல் 16 மாதங்களுக்குள் முடிவடைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 15 சதவீத பணிகள் நிறைவு

15 சதவீத பணிகள் நிறைவு

சென்னை - பெங்களூரு தொழில்துறை வழித்தடங்களுக்கான முன்னுரிமை அளிக்கப்படும் திட்டமாக இந்த சாலை திட்டம் கருதப்படுகிறது. தற்போது தமிழகத்திற்குள் மேற்கொள்ளப்படும் பணிகளில் வெறும் 15 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது. பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் வே சாலையானது கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு வழியாக செல்கிறது. இந்த சாலை பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டின் தொகை 16,730 கோடியாகும். இந்த எக்ஸ்பிரஸ் வே சாலை பெங்களூரு - சென்னை இடையேயான பயண நேரத்தை 2 முதல் 3 மணி நேரமாக குறைக்கும். இதனால், பயணிகளின் பயண நேரம் மிச்சம் ஆவதோடு தொழில்துறையிலும் முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

English summary
The Bengaluru-Chennai Expressway passes through Karnataka, Andhra Pradesh and Tamil Nadu. The project estimate for these road works is 16,730 crores. The National Highways Authority of India has informed that the Chennai to Bengaluru Expressway road work has been completed for a distance of 15 km.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X