• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"பச்சை துரோகம்".. அடங்காத சங்கீதா.. ஆவேசம் அடைந்த 15 வயது பிஞ்சு.. அப்டியே உறைந்து போன சிதம்பரம்!

Google Oneindia Tamil News

சென்னை: சங்கீதாவின் கூடா நட்பு கேடாய் முடிந்துள்ளது.. சொல்லி சொல்லி பார்த்த மகன், கடைசியில் பெற்ற தாயை கத்தியால் குத்தி கொன்றே விட்டார்.. இத்தனைக்கும் அந்த மகனுக்கு வெறும் 15 வயதுதான் ஆகிறது.. 15 வயது மகனுக்கு இவ்வளவு ஆத்திரம், வன்மம், கோபம் கொப்பளித்துள்ளது என்றால், சங்கீதாவின் நடத்தை எந்த அளவுக்கு அந்த குழந்தையை மனரீதியாக, உளவியல் ரீதியாக பாதித்திருக்கும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டி உள்ளது..!

சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்.. 45 வயதாகிறது.. கவரிங் பட்டறை தொழில் செய்து வருகிறார்... இவரது மனைவிதான் சங்கீதா... 35 வயதாகிறது.. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.. ஒரு பிரைவேட் ஸ்கூலில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கோவா: முதுகில் குத்திய பாஜக கூட்டணிக்கு குட்பை சொன்னது கோவா பார்வர்டு கட்சி- காங்.உடன் கை கோர்ப்பு! கோவா: முதுகில் குத்திய பாஜக கூட்டணிக்கு குட்பை சொன்னது கோவா பார்வர்டு கட்சி- காங்.உடன் கை கோர்ப்பு!

சங்கீதாவுக்கு பலருடன் கேடுகெட்ட நட்பு இருந்துள்ளதாக தெரிகிறது.. இந்த விஷயம் பாலமுருகனுக்கும் தெரிந்துள்ளது.. அதனால் சங்கீதாவை பலமுறை கண்டித்துள்ளார்.. இது சம்பந்தமாக இருவருக்கும் தகராறுகள் வீட்டிற்குள் வெடித்துள்ளன.. இதனால் 15 வயது மகனுக்கும் இதை பற்றி தெரியவந்துள்ளது.

 தனிமை

தனிமை

இதைதவிர, சங்கீதா அந்த ஊருக்குள் பலருடன் தவறாகவும் பழகி வந்ததை அந்த ஊர்க்காரர்களே கவனித்துள்ளனர். இந்த சமயத்தில்தான் சங்கீதாவிற்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் நெருக்கம் அதிகமாகி உள்ளது.. இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்திலும் அந்த இளைஞரை சங்கீதா வீட்டிற்குள் வரவழைத்தார்..

 அம்மா வீடு

அம்மா வீடு

இதை மகன் நேரடியாக பார்த்துவிட்ட நிலையில் மேலும் நொந்து போனான்.. தன் அம்மாவிடம் பலமுறை தனிப்பட்ட முறையிலும் மகனே அறிவுறுத்தி உள்ளான்.. ஆனாலும் சங்கீதா கேட்கவில்லை. தொடர்ந்து வீட்டிற்குள் பிரச்சனைகள் வெடித்ததால், சங்கீதா அவரது அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்.. அம்மா வீடு, சிதம்பரம் அருகே உள்ள கொத்தங்குடி கிராமம் ஆகும்..

 ஆத்திரம்

ஆத்திரம்

இந்நிலையில், நேற்று கணவன் வீட்டிற்கு சங்கீதா வந்திருக்கிறார்.. அப்போது வீட்டில் இருந்த பாலமுருகனும், மகனும் சங்கீதாவை மறுபடியும் கண்டித்தனர்.. இதனால் தகராறு வெடித்தது.. எவ்வளவு சொல்லியும் இப்போதுவரை அம்மா கள்ளக்காதலை கைவிட தயாராக இல்லை என்பதால், ஆத்திரமடைந்த மகன், கத்தியை எடுத்து வந்து சங்கீதாவி்ன் வயிற்றிலேயே சரமாரியாக குத்தினான். இதில் ரத்த வெள்ளத்தில் சங்கீதா துடிதுடித்து அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தார்.

கைது

கைது

இதையடுத்து, மகன், நேராக சிதம்பரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றான்.. எத்தனை முறை சொல்லியும் கள்ளக்காதலை அம்மா விடாததால், தானே கத்தியால் குத்தி விட்டதாக போலீசாரிடம் சொல்லி சரண் அடைந்தான்.. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கீதாவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து, விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

English summary
15 year old son killed mother near Chidambaram due to illegal relationship
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X