சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. சென்னைக்கு நல்ல தகவலை சொன்ன வானிலை மையம்

Google Oneindia Tamil News

Recommended Video

    TN Weather Report: அடுத்த 2 நாட்களுக்கு மழை : வானிலை ஆய்வு மையம் தகவல்- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் நேற்று சென்னை , புதுச்சேரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் உள்பட தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென் மேற்கு பருவமழை, மீண்டும் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. இதுவரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மட்டும் பெய்து வந்த மழை இப்போது வடகிழக்கு மாவட்டங்களிலும் பெய்யத்தொடங்கி உள்ளது. சென்னை , புதுச்சேரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்ததது. சாரல் மழை காரணமாக சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று வெப்பத்தின் அளவு குறைந்து காணப்பட்டது.

    16 districts get more rain today include chennai, kanchipuram, thiruvallur: says Chennai Meteorological Department

    நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி, நீலகிரி மாவட்டம், நடுவட்டம் தேவாலாவில், 4 செ.மீ., மழை பெய்துள்ளதாகவும். வால்பாறை, 3; சோழிங்கநல்லுார், 2; தாம்பரம், அரக்கோணம், திருத்தணி, சென்னை விமான நிலையம், ஊட்டியில், 1 செ.மீ., மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வாஸ்தவம்தான்.. ஊர்ல தண்ணி இல்லே.. இதை ஒத்துக்கவே 5 வருஷம் ஆச்சுங்க... வைரலாகும் தண்ணீர் கண்ணீர்! வாஸ்தவம்தான்.. ஊர்ல தண்ணி இல்லே.. இதை ஒத்துக்கவே 5 வருஷம் ஆச்சுங்க... வைரலாகும் தண்ணீர் கண்ணீர்!

    மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்நாடகா மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளில், தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில், சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கடலுார், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், நீலகிரி, ஆகிய, 16 மாவட்டங்களில், இன்று சில இடங்களில், லேசானது முதல், மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், வெப்பநிலை அதிகபட்சமாக 37 டிகிரி செல்ஷியசாகவும், குறைந்தபட்சம், 28 டிகிரி செல்ஷியசாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    English summary
    Chennai Meteorological Department said that 16 districts get more rain today include chennai, kanchipuram, thiruvallur, coimbatore, theni, dindigul, naagapattinam, cuddalore
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X