• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ஆபாசம்".. பையனுக்கு வயசு 17தான்.. 11 வயசு பிஞ்சுவை.. புதருக்குள்.. ஷாக்கில் உறைந்த செங்கல்பட்டு

Google Oneindia Tamil News

சென்னை: சிறுமிக்கு வயசு 11 ஆகிறது.. அந்த பையனுக்கு வயசு 17 ஆகிறது.. இந்த வயசிலேயே ஆபாசம், அசிங்கம் என்று திரிந்து, கடைசியில் கொலை வரை சென்றுள்ளது விவகாரம்.. இந்த பயங்கரத்தை கேள்விப்பட்டு செங்கல்பட்டு மாவட்டமே வாயடைத்து போயுள்ளது..!

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்துள்ளது வெங்கப்பாக்கம் என்ற இடம்.. இங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் ஒரு சிறுமியின் சடலம் கிடந்தது.

அதுவும் புதருக்குள் மிக மோசமான நிலைமையில் கிடந்ததாக போலீசாருக்கு தகவல் பறந்துள்ளது.. இதையடுத்து, போலீசாரும் அங்கு சென்று சடலத்தை மீட்டனர்.. போஸ்ட் மார்ட்டத்துக்கும் அனுப்பி வைத்து விசாரணையை ஆரம்பித்தனர்.

ஓராண்டு கள்ளக்காதல்.. 15 வயது சிறுமி மீதும் காமப்பார்வை.. துப்பாக்கி முனையில் தொல்லை.. எஸ்ஐ கைது ஓராண்டு கள்ளக்காதல்.. 15 வயது சிறுமி மீதும் காமப்பார்வை.. துப்பாக்கி முனையில் தொல்லை.. எஸ்ஐ கைது

சிக்னல்

சிக்னல்

ஆனால், எந்த க்ளூவும் கிடைக்கவில்லை.. இதனால், சம்பவம் நடந்த இடத்தில் செல்போன் சிக்னலை போலீஸார் ஆய்வு செய்தனர்... அப்போதுதான், ஒரு மாணவனின் செல்போன் சிக்னல் அங்கு தென்பட்டது.. சம்பந்தப்பட்ட மாணவன், ஐடிஐ படிப்பவராம்.. வயது 17 ஆகிறது.

குழப்பம்

குழப்பம்

இதையடுத்து, இந்த மாணவனிடம் விசாரணை ஆரம்பமானது.. ஆனால், லேசில் உண்மையை சொல்லவில்லை.. தனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லி கொண்டே இருந்தான்.. போலீசார் துருவி துருவி கேட்டாலும் மாணவன் எந்தவிஷயத்தையும் தெரிவிக்கவில்லை.. இதனால் குழம்பி போன போலீசார், அவனின் செல்போன் நம்பர்களை கொண்டு விசாரணையை ஆரம்பித்தனர்.

 ஸ்மார்ட் போன்

ஸ்மார்ட் போன்

அப்போதுதான் அந்த சிறுவனுக்கு அப்பா, அம்மா யாரும் இல்லை என்பதும், சொந்தக்காரர் வீட்டில் வளர்ந்து வந்ததும் தெரியவந்தது.. அம்மா, அப்பா இல்லாத பிள்ளை என்பதால், இவன் எது கேட்டாலும் சொந்தக்காரர்கள் வாங்கி தந்துவிடுவார்களாம்.. அப்படித்தான் ஸ்மார்ட் போன் வாங்கி தந்துள்ளனர்.. ஆனால், இந்த சிறுவனோ, அதில் ஆபாச வீடியோக்களை தினமும் பார்த்து பார்த்து வந்துள்ளான்.. ஒருகட்டத்தில், இந்த ஆபாச வீடியோவுக்கு பைத்தியமாகிவிட்டான்..

டவுன்லோடு

டவுன்லோடு

நிறைய வீடியோக்களையும் டவுன்லோடு செய்து வைத்திருக்கிறான். டவுன்லோடு செய்யப்பட்டதை நேரம் காலம் இல்லாமல் பார்த்து வந்துள்ளான்... இந்த பழக்கத்துடன் கூடவே, கஞ்சா பழக்கமும் இவனுக்கு சேர்ந்துள்ளது.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, போலீசார் இப்போது வேறுவிதமாக அந்த பையனை டீல் செய்ய ஆரம்பித்தனர். இப்போது பையன் திணற ஆரம்பித்தான்.. உளற ஆரம்பித்தான்.. கடைசியில் "ஆமா, நான்தான் கொலையை செய்தேன்" என்று சொல்லி போலீசாருக்கே ஷாக் தந்தான்.

சிறுமி

சிறுமி

கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு 11 வயதாகிறது.. 6-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறாள்.. இப்போது லாக்டவுன் என்பதால் ஸ்கூல் இல்லை.. வீட்டிலேயே இருந்திருக்கிறாள்.. கடந்த 19-ம்தேதி கரண்ட் பில் கட்டுவதற்காக சென்றிருக்கிறாள்.. அப்போது போன பெண்தான், அதுக்கப்பறம் வீட்டுக்கு வரவே இல்லை.. மகளை காணோம் என்று பெற்றோர் போலீசில் புகார் தரவும்தான், சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது...

கொலை

கொலை

சம்பவத்தன்று கரண்ட் பில் கட்ட சென்ற பெண்ணை, தனியாக மடக்கி சிறுவன் சந்தித்து பேசியுள்ளான்.. "அண்ணா, எப்படி இருக்கீங்க" என்றுதான் அந்த பெண் கேட்டிருக்கிறாள்.. பேசிக் கொண்டே அந்த பெண்ணை, காட்டுப்பக்கம் அழைத்து சென்றுவிட்டானாம் சிறுவன்.. அங்குதான் பாலியல் டார்ச்சர் தர ஆரம்பித்துள்ளான்.. சிறுமி கதறி அழவும், கீழே கிடந்த கல்லை எடுத்து அடித்தே கொன்றிருக்கிறான்... அப்போதுதான் முகத்தையும் கல்லால் நிறைய முறை அடித்து அடையாளம் தெரியாதவாறு சேதப்படுத்தி உள்ளான்.

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

இன்னும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரவில்லையாம்.. அது வந்தால்தான் மரணத்துக்கான காரணம் உறுதியாகதெரியவரும் என்கிறார்கள் போலீசார்.. இப்போதைக்கு சிறுவனை கைது செய்துள்ளனர்.. இந்த வயசில் ஜெயிலிலும் போட முடியாது என்பதால், சீர்திருத்த பள்ளியில் வைத்துள்ளனர்.. இதெல்லாம் கேள்விப்பட்ட செங்கல்பட்டு மாவட்டமே உறைந்து போயுள்ளது..!

English summary
17 year old boy killed 11 year old girl near Chengalpet
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X