• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"அபார்ஷன்".. மொத்தம் 30 பேர்.. சீரழிக்கப்பட்ட 17 வயது பெண்.. யார் அந்த "புள்ளிகள்".. ஷாக்!

|

சென்னை: மொத்தம் 30 பேராம்.. 17 வயது சிறுமியை 2 வருடமாகவே தொடர்ந்து நாசம் செய்து வந்துள்ளனர்.. தமிழகத்தின் தலைநகரில் இப்படி ஒரு கொடுமை நடந்துள்ளது, மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது..!

சென்னை தாம்பரம் அடுத்துள்ள பகுதி கௌரிவாக்கம்.. இங்கு வசித்து வருபவர் கார்த்திக்.. செண்டிரிங் வேலை பார்க்கிறார்.. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை 3 வருடமாக காதலித்து வந்துள்ளார். இந்த பெண்ணுக்கு அப்பா இல்லை.. அம்மா மட்டும்தான்.. அதனால், அம்மா வீட்டு வேலை செய்துதான் சிறுமியை கவனித்து வந்துள்ளார்.

குடும்ப நிலைமை தெரிந்தும், கார்த்திக் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை காட்டி பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.. மேலும், நெருக்கமாக இருந்தபோதெல்லாம் அதை வீடியோவும் எடுத்து வைத்து கொண்டார் கார்த்திக்.

14 வயது சிறுமி 12 பேரால் சீரழிந்த விவகாரம்.. பலாத்காரம் செய்த கொடூரனிடம் பணம் பெற்ற 14 வயது சிறுமி 12 பேரால் சீரழிந்த விவகாரம்.. பலாத்காரம் செய்த கொடூரனிடம் பணம் பெற்ற

 வீடியோ

வீடியோ

இந்த வீடியோ பற்றி தன்னுடைய நண்பர் மணிகண்டனுக்கு சொல்லி உள்ளார். பனங்காட்டு படைகட்சி கெளரிவாக்கம் மாவட்ட செயலாளர்தான் இந்த மணிகண்டன் என்பவராம். உடனே மணிகண்டனும், கார்த்திக்கும் அந்த வீடியோவை சிறுமியிடம் காட்டி, இருவரும் பலாத்காரம் செய்துள்ளனர்.. இதையும் வீடியோ எடுத்து வைத்து கொண்டனர்.. இப்படியே இந்த வீடியோக்களை காட்டி பல மாதங்களாகவே கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

 பார்ட்னர்

பார்ட்னர்

ஒருகட்டத்தில், மணிகண்டனும், கார்த்திக்கும் அந்த வீடியோவை தங்களுடைய பிசினஸ் பார்ட்டனரும் ரியல் எஸ்டேட் செய்து வருபவருமான தனசேகரிடம் காட்டினார்களாம்.. இந்த தனசேகர் யார் என்றால், திமுக தாம்பரம் சட்டமன்ற தொகுதி சோஷியல் மீடியா பொறுப்பாளர் என்று கூறப்படுகிறது.. பிறகு 3 பேருமாக சேர்ந்து அந்த பெண்ணை சீரழித்துள்ளனர்.. பலாத்காரம் செய்யும்போதெல்லாம் அந்த பெண்ணுக்கு மிரட்டி மது கொடுத்துள்ளனர்.. இப்படியே 2 வருடங்கள் ஓடி இருக்கிறது..

 மிரட்டல்

மிரட்டல்

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சிறுமி கர்ப்பம் ஆகிவிட்டார்.. இந்த விஷயம் தெரிந்ததும், இந்த 3 பேரும் சேர்ந்து சிறுமியை மிரட்டியே அபார்ஷன் செய்ய வைத்துள்ளனர்.. அதற்கு பிறகும் பலமுறை பலாத்காரங்கள் நடந்துள்ளன.. ஒருகட்டத்தில் டார்ச்சர் தாங்க முடியாமல், சிறுமி, அவர் அம்மாவிடம் நடந்ததை எல்லாம் சொல்லி அழுதுள்ளார்..

 புகார்

புகார்

இதை கேட்டு அதிர்ந்து போன அந்த ஏழை, சமூக ஆர்வலர் ஒருவரிடம் சொல்ல, கடைசியில் விஷயம் தாம்பரம் மகளிர் போலீஸ் வரை வந்தது.. இப்போது, அவர் கொடுத்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்தனர்.. ஆனால் அதற்குள் 3 பேருமே எஸ்கேப் ஆகிவிட்டனர்.. இவர்களை வலைவீசி தேடிய போலீசார், கார்த்திக், மணிகண்டனை கைது செய்து புழலில் தூக்கி வைத்துள்ளனர்.. தனசேகர் தலைமறைவாக இருப்பதால் தேடி வருகிறார்கள்.

வறுமை

வறுமை

சிறுமி, எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.. அதற்கு பிறகு வறுமையால் படிக்க முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.. அம்மா வேலைக்கு சென்றுவிட்ட பிறகு, தனியாக இருக்கும் சிறுமியை இவர்கள் 3 பேருமே பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். அபார்ஷன் செய்யும்போதுகூட, சிறுமிக்கு 18 வயசு என்று பொய் சொல்லிதான் கருக்கலைப்பு செய்துள்ளனர்.. இந்த விஷயத்தை எல்லாம் வெளியில் சொன்னால், அம்மாவை கொன்றுவிடுவதாக சிறுமியை மிரட்டியே பணிய வைத்துள்ளனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஆனால், இந்த விஷயம் வேறுவிதமாக தற்போது வெடித்து வருகிறது.. சம்பந்தப்பட்டவர்கள் வெறும் 3 பேர் இல்லை.. 30-,க்கும் மேற்பட்டோர் என்று, அந்த சமூக ஆர்வலரே தெரிவித்துள்ளார்.. அவர்கள் அத்தனைபேரும் அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கு கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. தாம்பரம் ஸ்டேஷனில் அளிக்கப்பட்ட புகாரில் இது குறித்தும் விரிவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

 யார் அவர்கள்?

யார் அவர்கள்?

இப்போதைக்கு 2 பேர் தான் கைதாகி உள்ளனர்.. இன்னும் 28 பேர் மிச்சம் உள்ளனர்.. சிறுமியை விசாரித்தால்தான், அந்த புள்ளிகள் யார் யார் என்பதெல்லாம் தெரிய வரும் என்றும் சொல்லப்படுகிறது.. கிட்டத்தட்ட இதுவும் அயனாவரம் சம்பவம் போலவே நமக்கு நெஞ்சு பதறுகிறது.. எத்தனையோ பாலியல் குற்றங்களுக்கு தண்டனை தரப்பட்டு வந்தாலும், மறுபடியும் மறுபடியும் இப்படி பிஞ்சுகள் நாசமாவதை யாராலுமே தடுக்க முடியவில்லை.. அப்படியென்றால், தண்டனையைதான் தீவிரமாக்க வேண்டி உள்ளது.. அதைதான் இந்த பிஞ்சுகளின் கதறல்கள் நமக்கு தெரியப்படுத்துகிறது..!

English summary
17 year old girl was raped by many for 2 years and two arrested
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X