சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீட் கிடைக்கலை.. மரியாதை கிடைக்கலை.. அதிருப்தியில் அதிமுக தலைகள்.. பகீர் பரபரப்பில் அதிமுக!

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிருப்தியில் மூத்த தலைவர்கள்... கலக்கத்தில் அதிமுக

    சென்னை: அடிக்கிற வெயிலில் பரபரப்பான ஒரு விஷயம் தீயாய் பரவி தமிழக அரசியலையே ஆட்டம் கொள்ள வைக்க போகிறது!

    திமுக, அதிமுக, அமமுக என பிரதான கட்சிகள் கூட்டணிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி விட்டனர். அந்தந்த கட்சி தலைமையும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டது!

    இதில் தந்தை எவ்வழியோ தனயனும் அவ்வழியே என திமுகவும், நாங்கள் மட்டும் என்ன உங்களுக்கு சளைத்தவர்களா என அதிமுகவும் மாறி மாறி வாரிசுகளை கொண்டு வந்து இறக்கி விட்டிருக்கிறார்கள்!

    "அம்மா" ஒதுக்கி ஓரம் கட்டிய 'அக்ரி'.. எப்படி ஓட்டு போடுவது.. குழப்பத்தில் திருவண்ணாமலை அதிமுக!

    கட்சி தொண்டர்கள்

    கட்சி தொண்டர்கள்

    இதனால் தீவிரமாக வேலை பார்த்து வந்த இரு கட்சி தொண்டர்கள் அதிருப்தி அடைந்தார்கள் என்பது வேறு விஷயம்! ஆனால் மூத்த புள்ளிகள் தங்களுக்கு வாய்ப்பு இல்லாததால் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்களாம்.

    கட்சி தாவலா?

    கட்சி தாவலா?

    குறிப்பாக அதிமுகவின் சிட்டிங் எம்பிக்கள் பெரும்பாலானோருக்கு தற்போது வாய்ப்பு தரப்படவில்லை. மீண்டும் வாய்ப்பு தராத கிட்டத்தட்ட 17 அல்லது 18 எம்பிக்கள் திமுக பக்கம் அல்லது அமமுக பக்கம் தாவலாமா என யோசித்து வருகிறார்களாம்!

    பின்னடைவு

    பின்னடைவு

    இது குறித்த உறுதியான தகவல் இதுவரை வரவில்லை என்றாலும், இப்படி ஒரேயடியாக இத்தனை எம்பிக்கள் இன்னொரு கட்சிக்கு செல்வார்களேயானால், அதுவும் இப்படிப்பட்ட நேரத்தில் கட்சி தாவுவது என்பது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவைதான் ஏற்படுத்தும். அத்துடன் மாற்று கட்சியான திமுக, அமமுகவுக்கோ கூடுதல் பலத்தை பெற்றுத்தந்துவிடும்.

    கட்சிகளுக்கு தூது

    கட்சிகளுக்கு தூது

    இப்போதைக்கு அதிருப்தி அதிமுக எம்பிக்கள், மாற்று கட்சியான திமுக, அமமுகவுக்கு தூது அனுப்பி உள்ளார்களாம். அங்கிருந்து பதில் வருவதை பொறுத்துதான் அடுத்தக்கட்ட நகர்வு என்னாகும் என தெரியவரும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே கண்ணப்பன் பிள்ளையார் சுழி நேற்று போட்டுவிட்டார். இப்படியே போனால், கடைசியில் மெகா கூட்டணி என்ற பெயர் தேய்ந்து விடுமோ என்ற கலக்கம் தொண்டர்களிடையே எழுந்துள்ளதாம்.

    English summary
    18 AIADMK MPs are in frustration because of the lack of seats to contest the MP election. It is said that they are likely to go to another party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X