சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி.. சப்பாத்திக்கு 5% மட்டுமே.. ஏன் இப்படி பண்ணுறீங்க.. கேட்கும் நெட்டிசன்

Google Oneindia Tamil News

பெங்களூர்: பரோட்டா மற்றும் சப்பாத்தி ஆகியவற்றை ஒன்றாக கருத முடியாது, எனவே பரோட்டாவுக்கு 18 சதவீதம் என்ற அளவில் கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. #handsofparota அதாவது பரோட்டாவிலிருந்து கையை எடுங்கள் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட்டாக தொடங்கியுள்ளது.

உணவின் மீதான பாசிசம் என்று மலையாளிகள் குற்றம்சாட்டி சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த உணவு தயாரிப்பு நிறுவனம் ஒன்று Authority for Advance Rulings (கர்நாடகா கிளை) அமைப்பில் ஒரு முறையீடு செய்திருந்தது.

அதில், ரொட்டி, சப்பாத்தி ஆகியவற்றிற்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாகவும், பரோட்டா மீது 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாகவும், எனவே இதையும் குறைக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு இன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு

சப்பாத்தி vs பரோட்டா வித்தியாசம்

சப்பாத்தி vs பரோட்டா வித்தியாசம்

முறையீடு செய்த இந்த நிறுவனம் இட்லி- தோசை மாவு, பரோட்டா, தயிர், பன்னீர் போன்ற உணவு பொருட்களை சப்ளை செய்து வரக்கூடிய ஒரு நிறுவனமாகும். இதன் முறையீட்டை விசாரித்த அந்த அமைப்பு, சப்பாத்தி என்பது உடனடியாக எடுத்து சாப்பிடக்கூடியது, ஏற்கனவே சமைக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கக்கூடியது. பரோட்டா அப்படி கிடையாது. பரோட்டாவை பாக்கெட்டில் வாங்கினாலும் அதை சூடுபடுத்தி சாப்பிட வேண்டும். அதாவது சமையலுக்கு அது உட்படுகிறது. எனவே சமைக்க வேண்டிய பொருள் என்ற பிரிவின் கீழ் வருகிறது. அதற்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பு செல்லத்தக்கது என்று உத்தரவிட்டது.

பரோட்டாவிலிருந்து கையை எடுங்கள்

பரோட்டாவிலிருந்து கையை எடுங்கள்

இந்த செய்தி வெளியான நிலையில் சமூக வலைத்தளங்களில், கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்களும், உணவு பிரியர்களும், இது உணவு மீதான பாசிசம் என்று குற்றம்சாட்டி #handsofparota என்ற வார்த்தையை, டிரெண்ட் செய்து வருகின்றனர். பரோட்டாவிலிருந்து கையை எடுங்கள் என்று பொருள்படும் வாசகம் இதுவாகும்.

கேரள உணவுகள்

கேரள உணவுகள்

ஆறு மாதங்களுக்கு முன்பு, ரயில்வே பழம்பொரி, புட்டு, பரோட்டா ஆகியவற்றை ரயில்வே மெனுவிலிருந்து அகற்றி, ரஜ்மா சாவல் போன்ற அன்னிய உணவுகளை கொண்டுவந்தது. இப்போது, ​​அவர்கள் 18% ஜிஎஸ்டியை பரோட்டா மீது சுமத்தப் போகிறார்கள். ரொட்டி, சப்பாத்தி இன்னும் 5% ஸ்லாப்பில் இருக்கிறது. இதுதான் உணவு பாசிசம், என்கிறார் இந்த நெட்டிசன்.

உணவு பாசிசம்

உணவு பாசிசம்

ரொட்டிக்கு 5% ஜிஎஸ்டி மற்றும் பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி ?! இந்த பாகுபாடு இப்போதே முடிவுக்கு வர வேண்டும். உணவு பாசிசம் வேண்டாம் என்று சொல்லுங்கள்! நாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது! இவ்வாறு கொந்தளிக்கிறார் இந்த நெட்டிசன்.

English summary
Parotta and Roti cannot be considered together, so Parotta will have GST tax of 18 percent, Authority for Advance Rulings ordered.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X