சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இவ்வளவு பெரிய பாதுகாப்பா.. நீதிபதி சத்தியநாராயணனின் அறையில் குவிக்கப்பட்ட சிஐஎஸ்எப் வீரர்கள்!

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வர உள்ள நிலையில் நீதிபதி சத்தியநாராயணனின் அறையில் சிஐஎஸ்எப் வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்டது செல்லும்.. ஹைகோர்ட் 3வது நீதிபதி அதிரடி தீர்ப்பு- வீடியோ

    சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வர உள்ள நிலையில் நீதிபதி சத்தியநாராயணனின் அறையில் சிஐஎஸ்எப் வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    18 MLA disqualification case verdict: CISF gives huge protection to Justice M Sathyanarayanan

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறிய டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் தமிழக அரசியலில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இவர்கள் தமிழக அரசு கொறடாவால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிரான வழக்கில்தான் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் தீர்ப்பு வழங்க போகும் நீதிபதி சத்தியநாராயணனின் அறையில் சிஐஎஸ்எப் வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். 20க்கும் அதிகமான வீரர்கள் நீதிபதியை சுற்றி நிற்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    [தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் நாட்டின் முன்னணி வழக்கறிஞர்கள்]

    மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை என்று அழைக்கப்படும் இந்த பாதுகாப்பு படை மிகவும் சிக்கலான நேரங்களில் மட்டும் களமிறங்கும். இந்த நிலையில் நீதிபதி சத்தியநாராயணனின் அறையில் சிஐஎஸ்எப் வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    ஒருவேளை அரசு தரப்பிற்கு எதிராக நீதிபதி வழங்க இருக்கிறாரோ என்ற கேள்வியை இது ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 18 எம்எல்ஏக்கள் வழக்கில் அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுந்தருக்கு எதிராக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    18 MLA disqualification case verdict: Central Industrial Security Force gives huge protection to Justice M Sathyanarayanan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X