சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குற்றாலத்தில் அதிர்ச்சியில் தினகரன் ஆதரவாளர்கள்.. தினகரன் அணியில் பிளவா?.. அடுத்து என்ன?

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு டிடிவி தினகரன் தரப்பிற்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் புஸ்ஸான தினகரன் கணிப்பு- வீடியோ

    சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு டிடிவி தினகரன் தரப்பிற்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    தகுதி நீக்க வழக்கில்18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கமும் செல்லும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

    சபாநாயகரின் தீர்ப்பு சரிதான் என்று நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு வழங்கியுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    [இடைத்தேர்தலை சந்திக்க தயார்.. நாங்கள் ஜெயிப்போம்.. தினகரன் பரபர பேட்டி!]

    யாரும் எதிர்பார்க்கவில்லை

    யாரும் எதிர்பார்க்கவில்லை

    யாருமே இப்படி ஒரு தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக தினகரன் ஆதரவாளர்கள் இப்படி தீர்ப்பு வரும் என்று நினைக்கவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    பெரிய அதிர்ச்சி

    பெரிய அதிர்ச்சி

    மீண்டும் எம்எல்ஏ பதவியை பெறலாம் என்று நினைத்தவர்களுக்கு இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆசையாக குற்றாலத்தில் காத்துக் கொண்டு இருந்தவர்கள் இதனால் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். இப்படிப்பட்ட ஏமாற்றத்திற்கு அவர்கள் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.

    அடுத்து என்ன

    அடுத்து என்ன

    இவர்கள் எல்லோரும் இந்த வழக்கிற்கு எதிராக மேல்முறையீடு செய்வார்களா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். பெரும்பாலும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் தேர்தலை சந்திக்க தயாராகி இருப்பதாகவே தகவல்கள் வருகிறது.

    பிரச்சனை

    பிரச்சனை

    அதுமட்டுமில்லாமல், தினகரன் தரப்பில் இதனால் பிளவு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது. தினகரனின் முக்கியமான சில ஆதரவாளர்கள் இந்த தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். இதனால் அவர்கள் தினகரனுக்கு எதிராக களமிறங்க வாய்ப்புள்ளது.

    English summary
    18 MLA disqualification case verdict: TTV Dinakaran supporters upset over the verdict.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X