சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2,000 மின்சாரப் பேருந்துக்கள் இயக்கப்படும்... அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் 2,000 மின்சாரப் பேருந்துக்கள் இயக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் போக்குவரத்து துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது: 12 ஆயிரம் புதிய BS-VI தரத்திலான பேருந்துகளையும் உலகத் தரத்தில் இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

2,000 electric buses Will operate in the metros Says M R Vijayabaskar

நாட்டில் நிலவி வரும் சுற்றுசுசுழுல் மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சியில் தற்போது தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதன் முதல்கட்டமாக, சென்னையில் மின்சார பேருந்து திட்டத்திற்கு கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு ஒப்புதல் அளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக சி40 நிறுவனத்திற்கும், போக்குவரத்து துறைக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், சென்னை, கோவை, மதுரையில் 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, ஜெர்மன் வங்கி உதவியோடு 12,000 பேருந்து மற்றும் 2,000 மின்சார பேருந்துகள் வாங்க அரசு திட்டமிட்டுள்ளது.

மேகதாது அணை திட்டத்தால் கர்நாடகவிற்கு எந்தப் பயனும் இல்லை... சொல்வது டி.கே சிவக்குமார் மேகதாது அணை திட்டத்தால் கர்நாடகவிற்கு எந்தப் பயனும் இல்லை... சொல்வது டி.கே சிவக்குமார்

மேலும், சென்னையில் முக்கிய வழித்தடங்களில் சார்ஜிங் பாயிண்ட் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மின்சார பேருந்துகளுக்கான வழித்தடங்கள், சார்ஜிங் பாய்ண்ட் குறித்த விரிவான திட்ட அறிக்கை அரசிடம் தரப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் விரைவில் 1,500 புதிய பேருந்துகள் இயக்கப்படும் .

கழிவறை மற்றும் படுக்கை வசதிகளை கொண்ட பேருந்துகள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து முதலமைச்சர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என்று போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

English summary
Minister M R Vijayabaskar Said that 2,000 electric buses Will operate in the metros
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X