சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 பேருக்கு கொரோனா.. மார்ச் 10 டூ 17 வேளச்சேரி பீனிக்ஸ் மால் போனீங்களா.. செக் பண்ணிக்குங்க!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் இரு பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மார்ச் 10 முதல் 17 ஆம் தேதி வரை அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

Recommended Video

    தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு... என்ன காரணம்?

    தமிழகத்தில் 124 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் சென்னை பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்த 28 வயது ஆணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    2 from Chennai Phoenix mall found Corona positive

    அவர் தற்போது திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 28 ஆம் தேதி வெளியான தகவலின்படி பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்து வந்த 25 வயது பெண்ணுக்கும் கொரோனா இருப்பது உறுதியானது.

    2 from Chennai Phoenix mall found Corona positive

    கொரோனா பாதிப்பு: இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 50-ஐ நெருங்கியது! கொரோனா பாதிப்பு: இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 50-ஐ நெருங்கியது!

    இவர் தற்போது அரியலூரில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பெண்ணுக்கு கேரளாவிலிருந்து வந்த வாடிக்கையாளரிடம் இருந்து தொற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. பீனிக்ஸ் மாலில் பணியாற்றிய இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு மார்ச் 10 முதல் 17 -ஆம் தேதி வரை சென்றிருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    அது போல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விசா விண்ணப்பிக்கும் மையத்திற்கு வந்தவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மையத்திற்கு மார்ச் 15-ஆம் தேதி சென்றவர்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

    English summary
    2 from Chennai Phoenix mall found Corona positive. Chennai Corporation asks isolates themselves those who had gone to the mall from march 10 to 15.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X