சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வந்தது தடுப்பூசி...புனேவில் இருந்து தமிழகத்துக்கு 2 லட்சத்து 45 ஆயிரம் கோவிஷீல்டு.. விறுவிறு பணிகள்

புனேவில் இருந்து சென்னைக்கு தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளன

Google Oneindia Tamil News

சென்னை: புனேவில் இருந்து சென்னைக்கு 21 பெட்டிகளில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 340 கோவிஷீல்டு தடுப்பூசிகள் மத்திய தொகுப்பில் இருந்து தமிழக அரசுக்கு வந்து சேர்ந்துள்ளன...!

தமிழ்நாட்டில் கொரோனா 2-ம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.. அதேசமயம், கடந்த ஒரு வாரமாகவே சில மாவட்டங்களில் வைரஸ் தொற்று அதிகரித்தபடியே காணப்படுகிறது..

ஆரம்பிச்சாச்சு.. 3 மணி நேரம்.. உங்க ஏரியாவில் எப்படி.. ட்வீட் போட்டு அமைச்சரை சீண்டிய கஸ்தூரி ஆரம்பிச்சாச்சு.. 3 மணி நேரம்.. உங்க ஏரியாவில் எப்படி.. ட்வீட் போட்டு அமைச்சரை சீண்டிய கஸ்தூரி

எனவே, இதை கட்டுப்படுத்த சென்னை, செங்கல்பட்டு, தஞ்சை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் உள்பட பல மாவட்டங்களில் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன... மற்றொருபுறம் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன...

மையங்கள்

மையங்கள்

எனவே, தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்ப்பதற்காக, தமிழகத்திற்கு அதிக அளவில் தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்பியும் வருகிறது. அதன்படி, நம் மாநிலத்திற்கு இதுவரை மொத்தம் 2 கோடியே 25 லட்சத்து 18 ஆயிரத்து 860 தடுப்பூசிகள் வந்துள்ளன.

 தடுப்பூசி

தடுப்பூசி

இதுவரை தமிழகத்தில் சுமார் 2 கோடியே 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.. நீண்ட நாட்களாக கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே பொதுமக்களுக்கு அதிகளவில் அளிக்கப்பட்டு வந்த நிலையில், மறுபடியும் கோவிஷீல்டு தடுப்பூசி தட்டுப்பாடு தமிழகத்திற்கு ஏற்பட்டது.. கொரோனா 2-வது அலை பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 முகாம்கள்

முகாம்கள்

கடந்த வாரம் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு 3 நாட்கள் இந்த பணி நிறுத்தப்பட்டிருந்தது.. பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை முதல் மறுபடியும் தடுப்பூசி அனைத்து முகாம்களிலும் போடப்பட்டது. வரவழைக்கப்பட்ட 8 லட்சம் தடுப்பூசிகளும் 2 நாட்களில் தீர்ந்துவிட்டன... பெரும்பாலான மாவட்டங்களிலும் தடுப்பூசி இருப்பு இல்லாததால் தடுப்பூசி முகாம்களும் மூடப்பட்டன... இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

 பொதுமக்கள்

பொதுமக்கள்

சென்னையிலும் இதே நிலை நீடிக்கிறது.. நேற்று முன்தினம், 3 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே இருப்பில் இருந்தன... அவற்றை மையங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு செலுத்தப்பட்டுவிட்டது.. சென்னையில் உள்ள 64 முகாம்களும் தடுப்பூசி இல்லாமல் நேற்று செயல்படவில்லை.

 மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

இத்தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து, நேற்று அமைச்சர் மா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் தற்போது கையிருப்பில் 12.5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.. அதனால், தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை.. இன்னும் 2 நாட்களில் மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு தடுப்பூசிகள் வரஉள்ளது.. அவைகளை, தேவைப்படும் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

Recommended Video

    கொரோனா மீண்டும் அதிகரிப்பது ஏன் | Dr. Shanthi Ravindranath Explain | Oneindia Tamil
     ஆய்வகம்

    ஆய்வகம்

    இந்த நிலையில் புனேவில் இருந்து 21 பெட்டிகளில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 345 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் ஃபிளைட் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன... தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த தடுப்பூசிகளை பெற்று கொண்டதுடன், அவைகளை தேனாம்பேட்டையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கும் அனுப்பி வைத்தனர்.. இதையடுத்து, அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் தடுப்பூசிகள் பிரித்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    2 lakh 45 thousand vaccines Came to Chennai from Pune
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X