சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஃபனி புயல்.. சென்னை, அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழு குவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: ஃபனி புயலை எதிர்கொள்ள வசதியாக, தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள் சென்னையிலும், 12 குழுக்கள் அரக்கோணத்திலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபனி புயல், வரும் 4ம் தேதி, ஒடிசாவில் கரையை கடக்க உள்ளது. இதன் தாக்கத்தால் பலத்த காற்று மற்றும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

2 NDRF Teams are on alert mode at Chennai

தமிழகத்திற்கு நேரடியாக பெரிய பாதிப்பு ஏற்படாது என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அரக்கோணத்தில் 12 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஒடிசாவில் அதிகபட்சமாக 25 வெள்ள மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் 12 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

English summary
2 Teams are on alert mode at RRC Chennai and in close touch with state administration, 12 teams are base Arakkonam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X