Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் நண்பனின் காதலி சாப்பிட்ட ஐஸ்கிரீம்.. 2000 கிமீ பறந்து வந்த இளைஞன்.. மறக்க முடியாத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகே, மாணவியுடன் ஏற்பட்ட காதல் போட்டியால் சென்னை மருத்துவ கல்லூரி மாணவரை துப்பாக்கியால் சுட முயன்ற இளைஞரை ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட இளைஞர் பூக்கடை போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

வேலூர் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த 25 வயதாகும் டாக்டர் ரோகன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள சென்னை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்து வருகிறார். இவர் மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மருத்துவ கல்லூரி எதிரே உள்ள ஒரு டீக்கடையில் நின்று டீ குடித்துக்கொண்டிருந்தார்.

2 people arrested for threatening Chennai medical college student with gun

அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் மாணவர் ரோகனிடம் இந்தியில் பேசியதுடன், திடீரென்று கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து அவரது நெற்றியில் வைத்து சுடப்போவதாக மிரட்டி உள்ளார். இதனால் ரோகன் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்தார்கள்..

இதனால் பயந்து போன துப்பாக்கி வைத்திருந்த 2 பேரும் தப்பி ஓடினார்கள். அவர்களில் ஒருவரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். இன்னொருவர் தப்பியோடி விட்டார். பிடிபட்ட இளைஞரை பொதுமக்கள் பூக்கடை போலீசில் ஒப்படைத்தனர். சென்னை பூக்கடை போலீசார் அவரை கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கைதான இளைஞர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கஜராஜ் பிரதாப்பால் என்ற ரித்திக் குமார் (25) என்பது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் தப்பியோடிய இன்னொரு இளைஞரான, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த அமித்குமார் (29) என்பவரை கைது செய்தனர்

முதலில் கைதான இளைஞர் ரித்திக்குமாரிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கியும், 2 குண்டுகளும் மற்றும் ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ரித்திக்குமார் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதுபற்றி போலீசார் கூறும் போது, ரித்திக்குமாரின் நண்பர் அமித்குமார், அவருடன் உத்தரபிரதேசத்தில் உள்ள பள்ளியில் படித்த பெண்ணை 7-ம் வகுப்பு முதல் காதலித்து வந்திருக்கிறார். அந்த மாணவியும் அவரிடம் நட்புடன் இருந்துள்ளார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 2 பேரும் டெல்லிக்கு வந்தனர். அந்த மாணவி டெல்லியில் உள்ள மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பு படித்தார்.

அமித்குமார் டெல்லியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. பட்டப்படிப்பு படித்தார். டெல்லியிலும் அவர்கள் காதலித்து வந்தார்களாம். 2 பேரும் ஜாலியாக டெல்லியில் வலம் வந்தார்களாம். இதனிடையே மருத்துவ மாணவி மருத்துவ மேல்படிப்புக்காக சென்னை எம்.எம்.சி. மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். தற்போது அந்த மாணவி முதுநிலை 2-ம் ஆண்டு படிக்கிறார்.

இதனிடையே இங்கு அவர் ரோகனை விரும்ப ஆரம்பித்துள்ளார். அமித்குமாரை கழற்றிவிட்டுவிட்டாராம். ரோகனுடன் ஒன்றாக சுற்றி திரிந்தது, 2 பேரும் ஐஸ்கிரீம் சாப்பிட்டது, குளிர்பானம் அருந்துவது போன்ற 'வீடியோ' காட்சிகளை அந்த மாணவி 'வாட்ஸ்-அப்'பில் ஸ்டேட்டஸ் வைத்து வெளியிட்டாராம். இதை பார்த்த அமித்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

மாணவியிடம் இதுபற்றி கேட்ட போது சரியாக பதில் சொல்லவில்லையம். அதன்பிறகு செல்போன் எண்ணையும் பிளாக் செய்து விட்டார். இதனால் கோபம் கொண்ட அமித்குமார் இந்த காதலை பிரிப்பதற்கு என்ன செய்யலாம்? என்று தனது நண்பரான ரித்திக்குமாரிடம் ஆலோசனை கேட்டார். துப்பாக்கி முனையில் ரோகனை மிரட்டலாம் என்று ஆலோசனை சொன்னாராம். அதன்படி நாட்டு துப்பாக்கி ஒன்றை வாங்கி கொண்டு சென்னை வந்துள்ளார் ரித்திக்குமார்.

ரோகனின் நடவடிக்கையை கண்காணித்த அவர்கள், ரோகன் வெளியே வரும் போது துப்பாக்கி முனையில் மிரட்ட முயற்சித்துள்ளார்கள். அவர் டீ சாப்பிட வந்தபோது துப்பாக்கி முனையில் மிரட்டியதுடன், காதலை கைவிட்டுவிட்டு ஒதுங்கும்படி பயமுறுத்தி உள்ளார்கள். அவர் கூச்சல் போட்டதால் பொதுமக்கள் திரண்டு வந்து ரித்திக்கை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார்கள். இந்த தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+