சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண்களுக்கு மட்டும் குறி.. சென்னையை கலக்கிய கில்லாடி ராணி அர்ச்சனா

வழிப்பறி செய்த பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    2 accused including woman arrested in chain robbery case by Chennai Police

    சென்னை: பெண்களையே குறி வெச்சு விரட்டி துரத்துவது ஒரு பெண்தான் என்றால் நம்ப முடிகிறதா.. ஆமாம்.. இப்ப சென்னை முழுக்க கில்லாடி ராணி அர்ச்சனா பத்தின பேச்சுதான்!

    சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் சாயங்கால நேரத்துலதான் எப்பவும் மார்க்கெட் போய் காய்கறி வாங்கிட்டு வருவார். இப்படித்தான் சம்பவத்தன்றும் காய்கறி வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னாடி ஒரு ஆட்டோ வந்து கொண்டே இருந்தது. இதை கவனித்த ஷர்மிளா, ஆட்டோ முதலில் போகட்டும் என்று ஓரமாக ஒதுங்கி நின்றார். அப்போது அந்த ஆட்டோவில் இருந்து ஒரு பெண் திடீரென, ஷர்மிளாவின் பர்ஸை பறிக்கவும், ஆட்டோ மின்னல் வேகத்தில் பறந்தது.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா சத்தம் போட்டு கூச்சல் எழுப்பினார். இதனால் அக்கம்பக்கத்தினர் விரைந்து ஓடிப்போய் அந்த ஆட்டோவை மடக்கி பிடித்தனர். ஆனால் அதற்குள் ஆட்டோ டிரைவர் எஸ்.ஆகிவிட்டார். அதனால் ஆட்டோவுக்குள் உட்கார்ந்திருந்த பெண்ணை மடக்கி பிடித்து போலீசுக்கும் தகவல் சொன்னார்கள்.

    ஆட்டோ

    ஆட்டோ

    விரைந்து வந்து விசாரித்த போலீஸ்.. விசாரணையை ஆரம்பித்ததும் மிரண்டே போய்விட்டது.
    ஆட்டோவுக்குள் உட்கார்ந்திருந்த பெண்தான் அர்ச்சனா. ஆந்திராவை சேர்ந்தவர். புளியந்தோப்பில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறார்.

    நெருக்கம்

    நெருக்கம்

    காலையில் ஏறி ஆட்டோவில் உட்கார்ந்து கொள்வது, நாள் முழுக்க வசதி உள்ள பெண்களை பின்னாடியே துரத்துவது.. பெண்களின் மிக நெருக்கத்தில் ஆட்டோவை ஸ்லோ செய்து, பிறகு நகையோ, பணத்தையோ அபேஸ் பண்ணிவிட்டு தப்பிவிடுவது.. இதுதான் இரவு வரை அர்ச்சனாவின் வேலை. பஸ்ஸில், நகை கடையில் பெண்கள் திருடுவதை பார்த்த போலீசாருக்கு, ஆட்டோவை எடுத்துக் கொண்டு இதே பிழைப்பாக அர்ச்சனா செய்வதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

    அர்ச்சனா

    அர்ச்சனா

    டிரைவர்களிடம் இனிமையாக பேசி, கொள்ளை அடித்த பணம், நகைகளில் ஒரு பங்கையும் தந்துவிடுகிறார். இதுபோன்ற டிரைவர்கள் பணம் கிடைக்கும் ஆசையில் அர்ச்சனாவுக்கு உதவி வருகிறார்கள். எனினும் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர் பிரபுவை போலீசார் கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர். அர்ச்சனாவிடம் பர்ஸ்-ம் பறிமுதல் செய்யப்பட்டது. இப்போதைக்கு அர்ச்சனாவும், பிரபுவும் ஜெயிலில் உள்ளனர்.

    பாராட்டு

    பாராட்டு

    இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால், ஷர்மிளாவின் கணவரான தணிகைவேல், எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில், கேட்பாரற்றுக் கிடந்த 35 சவரன் நகைகள் அடங்கிய பையை போலீசிடம் ஒப்படைத்ததற்காக கமிஷனர் ஏகே விஸ்வநாதனின் பாராட்டைப் பெற்றவராம்!

    English summary
    2 accused including woman arrested in chain robbery case by Chennai Police
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X