Just In
சிவகங்கை சப் இன்ஸ்பெக்டருக்கு மத்திய அரசு பதக்கம்!
சென்னை: சிவகங்கை ஆயுதப் படை போலீஸில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ஜெயேந்திரனுக்கு மத்திய அரசின் உயர் விருது கிடைத்துள்ளது.
காவல்துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்க மத்திய அரசு அதி உத்கிருஷ்ட சேவா பதக் என்ற பதக்கத்தை ஆண்டுதோறும் அளித்துக் கெளரவித்து வருகிறது.

அந்த விருதுக்கு சிவகங்கை காவல்துறையில் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் ஜெயேந்திரன். இன்னொருவர் திருப்புவம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் நாகராஜன்.
உழைத்தது போதும்... ஆளை விடுங்க சாமி... பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர்..!
இருவருக்கும் இந்த விருது கிடைத்துள்ளது. விருது பெறும் இரு அதிகாரிகளுக்கும் மாவட்ட காவல்துறையினர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.