சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஃபனி பாதிப்பு.. கொந்தளித்த வங்கக் கடலில் குளித்த திருவொற்றியூர் மாணவர்கள்.. கடலில் மூழ்கி இருவர் பலி

Google Oneindia Tamil News

சென்னை: ஃபனி புயல் பாதிப்பால் வங்கக் கடல் கொந்தளிப்பாக உள்ளதால் திருவொற்றியூர் கடலில் குளித்த இரு மாணவர்கள் பலியாகிவிட்டனர்.

திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர்கள் மதன் (11), சஞ்சய் (11) ஆகியோர் ஆவர். இவர்கள் அங்குள்ள அரசு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர்.

2 students were drowned in sea near Thiruvotriyur

இவர்கள் பள்ளி விடுமுறை என்பதால் இன்று காலை திருவொற்றியூரில் உள்ள கடற்கரை பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு குளித்தனர். கடலில் சற்று ஆழமான பகுதிக்கும் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது ராட்சத அலையில் இருவரும் சிக்கினர். இதையடுத்து கடலில் மூழ்கி பலியாகிவிட்டனர். அவர்களது உடல்கள் பட்டினத்தார் கோவில் குப்பம் அருகே கரை ஒதுங்கியது.

ஃபனி புயல்: சுயமரியாதை இருந்தால் ஒடிஸாவிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.. கமல்ஹாசன் கடும் தாக்கு! ஃபனி புயல்: சுயமரியாதை இருந்தால் ஒடிஸாவிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.. கமல்ஹாசன் கடும் தாக்கு!

இதையடுத்து போலீஸார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஃபனி புயலின் தாக்கத்தால் வங்கக் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அதையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

English summary
11 years old boys who were going to take bath in sea were drowned in Thiruvotriyur seashore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X