சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு ஆச்சரியம்.. தமிழகத்தில் நோட்டா பெற்ற ஓட்டு எவ்வளவு தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நோட்டாவுக்கு தனி ரசிகர்களே உள்ளார்கள் என்பது இந்த லோக்சபா தேர்தலிலும் நிரூபணமாகியுள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டிய கட்டாயம் அரசியல் கட்சிகளுக்கு உள்ளது என்பதை, தேர்தல் அரசியலில் நம்பிக்கையுள்ளவர்களால் மறுக்க முடியாது.

நாடாளுமன்றம், அல்லது சட்டசபை தேர்தல்களின்போது Nota அதாவது None of the above என்ற ஒரு வாய்ப்பு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வழங்கப்ப்டும். எந்த வேட்பாளரும் பிடிக்கவில்லைங்க என சொல்வோர் இந்த பொத்தானை அழுத்துவர்.

எந்த கட்சி மீதும் நம்பிக்கை இல்லை என்பது, மாற்று அரசியல் தேடுவோருக்கான குறியீடாக பார்க்கப்படுவதால், அது தற்போதுள்ள கட்சிகளுக்கு தார்மீக அழுத்தம் தரக் கூடியதாக உள்ளது.

1951-ல் இருந்து இந்தியப் பாதையை கண்டறிய முடியாத இடதுசாரிகள்: மார்க்சிஸ்ட் அருணன் கலகக் குரல் 1951-ல் இருந்து இந்தியப் பாதையை கண்டறிய முடியாத இடதுசாரிகள்: மார்க்சிஸ்ட் அருணன் கலகக் குரல்

கடந்த தேர்தல்

கடந்த தேர்தல்

கடந்த 2014ம் ஆண்டு, நடைபெற்ற தேர்தலில், தமிழகத்தில், 1.4 சதவீதம் ஓட்டுக்கள் நோட்டாவுக்கு விழுந்தன. மொத்தம், 5,82,062 பேர் நோட்டா பொத்தான் தேயத் தேய அழுத்தி தள்ளினர். அப்போது ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இரு ஆளுமைகள் தமிழக அரசியலில் இருந்தனர். இப்போது அவர்கள் இல்லாத நிலையில், எத்தனை விழுக்காடு மக்கள் நோட்டாவுக்கு ஓட்டுப் போட்டனர் என்ற அவா இயல்பானது.

கட்சிகள் வாக்கு சதவீதம்

கட்சிகள் வாக்கு சதவீதம்

அதற்கு முன்பாக, சில தகவலை பாருங்கள்: இந்த லோக்சபா தேர்தலில், திமுக மட்டுமே தனித்து 32.76% வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ்- 12.76%, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- 2.40%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- 2.43%, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- 1.11% வாக்குகளை பெற்றுள்ளன. ஆக மொத்தம், திமுக கூட்டணி பெற்ற மொத்த வாக்கு சதவீதம் என்பது, 51.46% ஆகும்.

அதிமுக பக்கம்

அதிமுக பக்கம்

அதிமுக மட்டும் தனித்து- 18.48% வாக்குகளை பெற்றது. பாமக- 5.24%, பாஜக- 3.66%, தேமுதிக- 2.19% வாக்குகளை பெற்றுள்ளன. ஆக மொத்தம், அதிமுக கூட்டணி மொத்த ஓட்டு வங்கி 29.57% மட்டுமேயாகும். பிறர் 17.11 சதவீத வாக்குகளை பெற்று அசத்தியுள்ளனர். இதில் நாம் தமிழர், மநீம போன்ற கட்சிகள், சுயேச்சைகள் வருவர்.

அடடே ஆச்சரியம்

அடடே ஆச்சரியம்

இந்த முறை, தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் நோட்டா வாங்கிய ஓட்டு - 1.28% அதாவது, 541,150 மக்கள் நோட்டாவுக்கு ஓட்டுப் போட்டுள்ளனர். அதாவது முன்பைவிட இப்போது நோட்டாவுக்கு ஓட்டு குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், முந்தைய தேர்தலைவிடவும், இந்த தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்க பல ஆப்ஷன்கள் வந்துவிட்டன. மநீம, அமமுக போன்றவை இந்த தேர்தலில் புதிதாக களம் கண்டன. நாம் தமிழரும் முன்பைவிட அதிக மக்களை சென்று சேர்ந்துள்ளது. எனவேதான், வாக்காளர் எண்ணிக்கை கூடியும், நோட்டா எண்ணிக்கை குறைந்துள்ளது. இது சர்ப்ரைஸ்தான்.

English summary
How any votes nota gets in Tamilnadu on 2019 Lok sabha elections? here is the detail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X