சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெளியானது போர்ப்ஸ் பட்டியல்.. முதல் இடத்தில் அம்பானி.. அதிர வைத்த அதானி.. தமிழரும் இருக்கிறார்!

2019ம் வருடத்திற்கான போர்ப்ஸ் பட்டியல் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    India Rich List 2019 : Mukesh Ambani dominates : போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்த தமிழர்-வீடியோ

    சென்னை: 2019ம் வருடத்திற்கான போர்ப்ஸ் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

    பிரதமர் மோடி தனது குடியரசுத் தின உரையில் முக்கியமான இரண்டு விஷயங்களை குறிப்பிட்டார். அதில் முதலாவது இந்தியாவை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற போகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    விரைவில் இந்தியா டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும். இந்தியாவில் ஏழ்மையை ஒழிக்க பணக்காரர்கள் கடுமையாக உழைத்து வருகிறார்கள். அவர்களை நாம் மதிக்க வேண்டும் என்று மோடி குறிப்பிட்டு இருந்தார்.

    எப்படி இருக்கிறார்

    எப்படி இருக்கிறார்

    ஆம் இந்தியாவில் உள்ள பணக்கார கோடீஸ்வரர்களுக்கு நாம் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்தியாவை சேர்ந்த பல கோடீஸ்வரர்கள் கடந்த வருடம் போர்ப்ஸ் பட்டியலில் பெரிய அடி வாங்கினார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோடீஸ்வரர்கள் போர்ப்ஸ் பட்டியலில் பின்னுக்கு சென்றனர்.

    மோடி பெருமை

    மோடி பெருமை

    இதையடுத்துதான் மோடி தன்னுடைய உரையில் கோடீஸ்வரர்களை பற்றி குறிப்பிட்டார். இந்த நிலையில் தற்போது 2019ம் வருடத்திற்கான போர்ப்ஸ் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

    என்ன பட்டியல்

    என்ன பட்டியல்

    அதன்படி இந்தியாவில் எப்போதும் போல ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி 51.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார். இவர் 12வது முறையாக முதல் இடத்தில் இருக்கிறார். ஜியோ மூலம் இவர் 4.1 பில்லியன் டாலர் சொத்துக்களை புதிதாக சம்பாதித்து இருக்கிறார்.

    அதானி

    அதானி

    அதற்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் கவுதம் அதானி இருக்கிறார். இவர் கடந்த முறை 10வது இடத்தில் இருந்தார். தற்போது 8 இடங்கள் முன்னேறி இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 15.7 பில்லியன் டாலராக உள்ளது.

    அசிம் பிரேம்ஜி எப்படி

    அசிம் பிரேம்ஜி எப்படி

    அதே சமயம் இரண்டாவது இடத்தில் அசிம் பிரேம்ஜி 17வது இடத்திற்கு சென்றுள்ளார். இவர் பலகோடி சொத்துக்களை இந்த வருடம் இழந்துள்ளார். அசோக் லேலாண்ட் நிறுவனர்கள் இந்துஜா பிரதர்ஸ் 15.6 பில்லியன் டாலர் சொத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

    என்ன இடம்

    என்ன இடம்

    ஷாபூர்ஜி பலோன்ஜி நிறுவன தலைவர் 15 பில்லியன் டாலர் சொத்துடன் நான்காம் இடத்தில் உள்ளார். கோடாக் மஹிந்திரா நிறுவனர் உதய் கோடாக் 14.8 பில்லியன் டாலருடன் ஐந்தாம் இடத்தில் உள்ளார். எச். சி. எல் நிறுவனர் தமிழர் சிவ் நாடார் 14.4 பில்லியன் டாலருடன் 6ம் இடத்தில் உள்ளார்.

    English summary
    2019 Forbes list: Mukesh Ambani still the Richest Indian, Gautam Adani gets to No. 2, Shiv Nadar in 6th place.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X